OMG2 Teaser: சிவனேன்னு இருக்கிறவரை ஏன் சீண்டுறீங்க.. அக்‌ஷய் குமாரை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்!

மும்பை: இப்போ தான் பிரபாஸ் ராமராக ஆதிபுருஷ் படத்தில் நடித்து எந்தளவுக்கு பகவான் ராமரை ட்ரோல் செய்ய முடியுமோ அந்தளவுக்கு ட்ரோல் செய்து விட்டார் என கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்தன.

இந்நிலையில், அடுத்ததாக அக்‌ஷய் குமார் சிவபெருமான் கெட்டப்பில் ஓ மை காட் 2 படத்தில் நடித்துள்ளார். அதன் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் அப்டேட்டை கொடுத்துள்ளார் அக்‌ஷய் குமார்.

அக்‌ஷய் குமாரை சிவனாக பார்த்த ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிடாமல் எதுக்குய்யா சிவனேன்னு இருக்கிறவரை சீண்டுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

Akshay Kumars Lord Siva look in OMG2 Teaser glimpse gets trolled

கடவுள்களை டார்கெட் செய்யும் பாலிவுட்: ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவன், லக்‌ஷ்மி, சீதை என தொடர்ந்து கடவுள்களை பாலிவுட் இயக்குநர்கள் டார்கெட் செய்து தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை இயக்கி கல்லா கட்டா முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதற்கு மாறாக கடவுள்களை இழிவுப்படுத்துகின்றனர் பாலிவுட் பிரபலங்கள் என படத்திற்கு எதிரான பாய்காட் டிரெண்டிங் தான் அதிகரித்து வருகின்றன.

ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்ப்பு: பகவான் ராமரின் ராமாயண கதையை வைத்து ஏகப்பட்ட சீரியல்கள் இந்தியில் உருவாகி உள்ளன. ஆனால், அதற்கு கிடைத்த வரவேற்பு கூட பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்துக்கு இல்லை என்பது தான் பேரதிர்ச்சியாக மாறி உள்ளது.

சைஃப் அலி கானை ராவணனாக நடிக்க வைத்து மாடர்ன் கால ராமாயணத்தை போல ஆதிபுருஷ் படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். ஆனால், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகள், சிஜிக்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் சரியாக இல்லை என்றும் இந்து மதக் கடவுளான ராமரை கொச்சைப்படுத்தி விட்டனர் என்றும் போர்க்கொடி தூக்க படம் படு தோல்வியை சந்தித்தது.

சிவனாக அக்‌ஷய் குமார்: இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஓ மை காட் 2 படத்தில் சிவனாக நடித்துள்ளார். சிவபெருமான் லுக்கில் அவர் இருக்கும் லேட்டஸ்ட் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியான நிலையில், அது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

வரும் ஜூலை 10ம் தேதி ஷாருக்கானின் ஜவான் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில், ஜூலை 11ம் தேதி செவ்வாய்க்கிழமை ஓ மை காட் 2 டீசர் வெளியாக உள்ள அறிவிப்பை அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். தியேட்டரில் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.

கலாய்க்கும் ரசிகர்கள்: சிவபெருமான் லுக் உங்களுக்கு செட்டே ஆகவில்லை என்றும் என்னடா இது சிவனுக்கு வந்த சோதனை என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ராம் சேது படத்தில் அக்‌ஷய் குமார் சமீபத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Akshay Kumars Lord Siva look in OMG2 Teaser glimpse gets trolled

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விடாமுயற்சியுடன் நடித்து வருகிறார். ஓ மை காட் டீசரில் ஏதாவது சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றால் மீண்டும் அந்த படத்திற்கும் பாய்காட் டிரெண்டிங்கை ஆரம்பித்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X