»   »  ரஜினியிடம் உதை வாங்குவது பெருமையான விஷயம்! - அக்ஷய் குமார்

ரஜினியிடம் உதை வாங்குவது பெருமையான விஷயம்! - அக்ஷய் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியுடன் நான் நடிப்பேன் என்றெல்லாம் நான் கனவு கூட கண்டதில்லை. வில்லனாக அவரிடம் உதை வாங்குவது பெருமைக்குரிய விஷயம், என்று கூறியுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படமான 2.0- வில் வில்லனாக நடிக்கிறார் இந்தி நடிகர் அக்ஷய் குமார்.

இந்தப் படம் முறைப்படி அறிவிக்கப்பட்டபோது, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி. அதன் பிறகு யாரிடமும் படம் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார் அக்ஷய் குமார்.

இதான் உங்க ஆசையா

இதான் உங்க ஆசையா

ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் மிகவும் வற்புறுத்தி இந்தப் படத்தில் அவர் வேடம் குறித்துக் கேட்டபோது, 'நான் அந்தப் படத்திலிருந்து விலகிவிட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்களா?' என்று கேட்டார்.

அதேநேரம், ரஜினியுடன் நடிப்பது குறித்த கேள்விக்கு பக்கம் பக்கமாக பதிலளித்திருக்கிறார் அக்ஷய்.

கனவிலும் நினைக்கல...

கனவிலும் நினைக்கல...

"ரஜினியுடன் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவரிடம் உதை வாங்குவது கூட எனக்கு பெருமையான விஷயம்தான்.

இன்று நடந்த ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சி வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் காட்சியை ரஜினி செய்யும் விதம் என்னை வியப்பின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ரஜினி மிகச் சிறந்த கலைஞர். அதைவிட மிகச் சிறந்த மனிதர்...

அற்புதமான விஷயம்

அற்புதமான விஷயம்

2.0 படம் எனக்கு அனைத்து வகையிலும் புதிய உலகம், புதிய அனுபவம்.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது உங்கள் கனவாக இருந்ததா என்று பலரும் கேட்கிறார்கள். கனவில் கூட நடக்காத ஒரு அற்புதமான விஷயம் அது. எனக்கு நடந்திருக்கிறது," என்றார்.

அர்னால்ட்?

அர்னால்ட்?

இந்த வேடத்தில் அர்னால்ட் நடிக்கவிருந்தது உங்களுக்குத் தெரியுமா? என்றால், "நிச்சயம் எனக்கு அதுபற்றி எந்த ஐடியாவும் இல்லை. எனக்கு ஷங்கர் தெரியும். அவரும் இன்னும் சிலரும்தான் என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தார்கள். ரஜினி படம். அதற்கு மேல் ஒப்புக் கொள்ள காரணம் தேவைப்படவில்லை," என்றார் அக்ஷய்.

English summary
Akshay Kumar, the antagonist in Rajini's 2.0 says that he was never dream to act along with Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil