திருமணத்துக்கு பிறகு அழுத நெப்போலியன் மருமகள்.. அதற்குள் அப்படி என்ன ஆச்சு?.. இனி தனுஷ் கையில்தான்

சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுடைய திருமணம் ஜப்பானில் நடந்தது. அதில் நெப்போலியனின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். விரைவில் அவர்களுக்கு அமெரிக்காவில் மீண்டும் திருமணம் நடக்குமென்றும் நெப்போலியன் உறுதியளித்திருக்கிறார். இந்நிலையில் அக்‌ஷயா கண் கலங்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான நெப்போலியன் அரசியல்வாதியாகவும் இருந்தவர். மத்திய இணையமைச்சராக இருந்த அவர்; தனது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயை சரி செய்வதற்காக அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு தனுஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஓரளவு கைகொடுத்தது. அதனையடுத்து அங்கேயே தனது மீத நாட்களை நகர்த்துவதற்கு நெப்போலியனின் குடும்பம் முடிவு செய்துவிட்டது.

napolean dhanush

செம செட்டில்தான்: அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை தொடங்கிய நெப்போலியன்; தனது மகனை நிர்வாக இயக்குநராக்கினார். மேலும் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் செய்துவருகிறார். யூட்யூபர் இர்ஃபான் நெப்போலியன் ஹோம் டூர் வீடியோ போட்டதையடுத்துதான்; நெப்போலியன் அமெரிக்காவில் இப்படி செட்டில் ஆகியிருக்கிறார் என்று பலருக்கும் தெரியவந்தது. சூழல் இப்படி இருக்க; தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் அவர்.

மகன் திருமணம்: அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷயா என்பவரை தனுஷுக்கு மணமகளாக பார்த்தார்கள். நிச்சயதார்த்தம் இந்தியாவில் நடக்க; திருமணம் ஜப்பானில் நடந்தது. கடந்த வாரம் நடந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மீனா, குஷ்பூ, கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார் என பலரும் கலந்துகொண்டார்கள். திருமணத்தில் மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் தங்களது அசத்தல் நடனத்தை வெளிப்படுத்தினார்கள். சங்கீத் நிகழ்வுக்கு கலா மாஸ்டர் பொறுப்பேற்றிருந்தார்.

எத்தனை கோடி ரூபாய் செலவு: நெப்போலியன் தனது மகனின் திருமணத்துக்காக கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டையும், 100 சவரன் தங்கத்தையும் தன் மருமகள் அக்‌ஷயாவுக்கு அவர் பரிசாக கொடுத்ததாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்கும் கடமையும் அக்‌ஷயாவுக்கு இப்போது வந்திருக்கிறது.

கண் கலங்கிய அக்‌ஷயா: இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு சில யூட்யூப் சேனல்களுக்கு தனுஷும், அக்‌ஷயாவும் சேர்ந்து பேட்டிகள் கொடுத்துவருகிறார்கள். அப்படி கலாட்டா யூட்யூப் சேனலுக்கு அவர்கள் அளித்த பேட்டியில் பேசிய அக்‌ஷயா, "தனுஷை நான் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது மனதுக்குள் நான் செய்துகொண்ட சத்தியம். எனது குடும்பத்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அம்மாவையும் அப்பாவையும் நான் பயங்கரமாக மிஸ் செய்வேன். இருந்தாலும் என்னை நெப்போலியன் குடும்பமும், தனுஷும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இனி எல்லாம் தனுஷ் கையில்தான்: இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே தனுஷுக்காக அக்‌ஷயா தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டார் என்று பலரும் விமர்சிக்கிறார்கள். அவர்களது விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் அக்‌ஷயாவை பார்த்துக்கொள்ள வேண்டும். விமர்சகர்களின் வாயை அடைக்க வேண்டும். இவை அனைத்தும் தனுஷின் கையில்தான் இருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X