நெப்போலியன் மகனுக்கு அக்ஷயா கொடுத்த முதல் பரிசு இதுவா?.. அட செம ரொமான்ஸா இருக்கேப்பா
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் நடைபெற்றது. அத்திருமணத்தில் திரையுலகினர், நெப்போலியனின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றதையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் தனது மனைவி அக்ஷயாவுடன் தனுஷ் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நெப்போலியன் தனது மகன்கள், மனைவியுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மூத்த மகன் தனுஷுக்கு சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோய் இருக்கிறது. அதனை குணப்படுத்துவதற்காக முதலில் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒத்துழைக்காததால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கு தனுஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தனது வீல் சேரில் இருந்தபடியே அவர் தன்னுடைய அன்றாட பணிகளை கவனித்துவருகிறார்.

அக்ஷயாவுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க அவருக்கு திருமணம் செய்துவைக்க நெப்போலியன் முடிவு செய்தார். அதன்படி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் இந்தியாவில் முடிந்த நிலையில்; கல்யாணத்தை அமெரிக்காவில் வைக்க திட்டமிட்டிருந்தார் நெப்போலியன். ஆனால் அங்கு சில சிக்கல்கள் எழலாம் என்பதால் திருமணத்தை ஜப்பானுக்கு மாற்றினார்.
முடிந்த திருமணம்: அதன்படி தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பானில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் திரையுலகிலிருந்து குஷ்பூ, ராதிகா, சரத்குமார், மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன், கார்த்தி உள்ளிட்டோர் ஜப்பானுக்கு நேரில் சென்று கலந்துகொண்டார்கள். மேலும் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்தினை வீடியோ மூலமாக தெரிவித்தார். படு பிரமாண்டமாக ஜப்பானில் அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் சங்கீத் நிகழ்வை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கலங்கிய நெப்போலியன்: இதற்கிடையே நெப்போலியன் மகனின் திருமணத்தை சிலர் கடுமையாக விமர்சித்தனர். அதேசமயம் தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஒரு அப்பாவாக நெப்போலியன் நினைப்பதில் எந்தவிதமான தவறுமே இல்லை என்று ஒருதரப்பினர் அவருக்கு ஆதரவையும் கொடுத்தார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷ் அக்ஷயா கழுத்தில் தாலி கட்டியபோது மேடையில் நின்றிருந்த நெப்போலியன் கண் கலங்கிய வீடியோ பலரையும் நெகிழ்வடைய செய்தது.
செம பரிசு: இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நெப்போலியனும், அக்ஷயாவும் இணைந்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது பேசிய அக்ஷயா, 'நான் ஓவியம் நன்றாகவே வரைவேன். தனுஷுக்கு அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து முதல் கிஃப்ட்டாக கொடுத்தேன். எங்களுடைய முதல் கிஃப்ட் அதுதான்' என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











