நெப்போலியன் ஃபேமிலி சமமா நடத்தினாங்க.. விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாது.. அக்ஷயா பெற்றோர் பதிலடி!
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தாலும் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளை நெப்போலியன் மட்டுமில்லாமல் மணமகள் அக்ஷயா, அவரது பெற்றோர் என அனைவரும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்த திருமணம் அவசியம்தானா என்பன உள்ளிட்ட கேள்விகள் இவர்களை தொடர்ந்து வருகின்றன.
தனுஷிற்கு தேவை மனைவி இல்லை நர்ஸ் மட்டுமே என்பன போன்ற மிகவும் கடுமையான விமர்சனங்களையும் நெப்போலியன் உள்ளிட்டவர்கள் சந்தித்து வருகின்றனர். சிலவற்றிற்கு அவர்கள் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். சிலவற்றை எதிர்கொள்ள முடியாமல் நெப்போலியன் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் மிகப்பெரிய ஹீரோ, வில்லன் என சினிமாவில் அதிரடி காட்டியவர். தொடர்ந்து அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு எம்பியானவர். இந்நிலையில்தான் அவர் மிகப்பெரிய ஒரு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மூத்த மகன் தனுஷின் உடல்நலப் பிரச்சினைக்காக அமெரிக்காவில் செட்டிலாகும் சூழல் ஏற்பட்ட நிலையில், அதை தைரியமாக எதிர்கொண்டார் நெப்போலியன். அமெரிக்கா சென்றநிலையிலும் தன்னுடைய வாழ்க்கை, பிசினஸ் என அனைத்தையும் சிறப்பாக அமைத்துக் கொண்டார். சாப்ட்வேர் பிசினஸ், விவசாயம் என அமெரிக்காவில் அதிரடி காட்டினார்.
தனுஷ் -அக்ஷயா திருமணம்: நெப்போலியன் மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் ஏற்பட்ட நிலையில், அவரது படிப்பு, சிகிச்சை போன்றவற்றிற்காக நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். தனுஷை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே அவரது நோய்க்கு மிகச்சிறப்பான மருந்து என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், தன்னுடைய மகனின் அனைத்து விருப்பங்களையும் சிறப்பான முறையில் அவர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷின் திருமணத்தையும் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் ஜப்பானில் நடத்தி முடித்துள்ளார். ஜப்பானில் திருமணம் நடக்க வேண்டும் என்பதும் தனுஷின் விருப்பம்தான்.
நெப்போலியன் வருத்தம்: நெல்லையை சேர்ந்த அக்ஷயாவுடன் தனுஷின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமண நிச்சயதார்த்தம் நடந்த பொழுதிலிருந்தே இந்த திருமணம் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன நிலையில், தற்போதும் அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தனுஷிற்கு இந்த திருமணம் அவசியம்தானா, அவருக்கு தேவை மனைவியில்லை, நாஸ் மட்டுமே என்பது போன்ற விமர்சனங்கள் தொடரும் நிலையில், சிலவற்றை மனஉறுதியுடன் சந்தித்து வரும் நெபபோலியன் சிலவற்றை சந்திக்க முடியாமல் தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து வருகிறார்.
ஒதுக்கப்படவில்லை: இதனிடையே இந்த திருமணத்தில் தன்னுடைய மகள் அக்ஷயாதான் முடிவெடுத்தார் என்றும் அவருடைய முழுமையான சம்மதத்துடனேயே இந்த திருமணம் நடந்ததாகவும் அக்ஷயாவின் பெற்றோர் தற்போது பேசியுள்ளனர். திருமணம் குறித்து நெப்போலியன் உள்ளிட்ட பலரும் பேசிய நிலையில் அவர்கள் பேசவில்லை என்றும் நெப்போலியன் அவர்களை ஒதுக்கிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தங்களை நெப்போலியன் சமமாக நடத்தியதாகவும் தங்களை சம்மந்தி என்றுதான் அவரும் அவரது மனைவி ஜெயசுதாவும் மரியாதையுடன் அழைத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு திரும்பிய அக்ஷயா பெற்றோர்: தாங்கள் ஒதுக்கப்பட்டதாக எழும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் தாங்கள் உடனிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த திருமணத்திற்காக கடந்த சில தினங்களாக அவர்கள் ஜப்பானில் இருந்த நிலையில், இன்றை ய தினம் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, அக்ஷயா பிரிய மனமில்லாமல் பிரிந்ததை பார்க்க முடிந்தது. தங்களது மகளை பிரிவது வேதனை அளித்தாலும் பாதுகாப்பான இடத்தில் அவரை ஒப்படைத்தது குறித்தும் அக்ஷயாவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











