போதைப் பொருள் விவகாரம்.. ராகிணி, சஞ்சனாவைத் தொடர்ந்து.. போலீசில் ஆஜரான பிக் பாஸ் பிரபலங்கள்!
பெங்களூரு: நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 நடிகர்கள் போலீசாரிடம் இன்று ஆஜராயினர்.
கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்
கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகிணி திவேதி
இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்
இதில் மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், அவர் கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களிடம் நான்கு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். அவர்கள், தாங்கள் பார்ட்டிகளுக்கு சென்றது உண்மை என்றும் ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும் கூறினர்.

பார்ப்பன அக்ரஹாரா
இதையடுத்து அவர்களை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியும் சஞ்சனா கல்ராணியும் பார்ப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அகுல் பாலாஜி
இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 2 கன்னட நடிகர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். நடிகர்கள் அகுல் பாலாஜி, ஆர்யன் சந்தோஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று ஆஜரானார்கள். இருவரும் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். கன்னட பிக்பாஸிலும் கலந்துகொண்டவர்கள்.


Click it and Unblock the Notifications











