Al Pacino: 83 வயதில் 29 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய அல் பசீனோ.. ராபர்ட் டி நீரோவையே மிஞ்சிட்டாரே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தி காட் ஃபாதர் படத்தில் நடித்து உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ 83 வயதில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்கிற செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஸ்டன் ஆக்கி உள்ளது.

இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துக் கொண்டு விவாகரத்து செய்த அல் பசீனோவுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவரது 4வது காதலி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் 79 வயதில் குழந்தையை பெற்ற ராபர்ட் டி நீரோ பற்றி பரபரப்பு பேச்சுக்கள் ட்ரோல்கள் அடிபட்ட நிலையில், அவரையே மிஞ்சி விட்டார் அல் பசீனோ என கிண்டலடித்து வருகின்றனர்.

Al Pacino beats Robert De Niro and Expecting A Baby With Girlfriend Noor Alfallah at the age of 83

நடிப்பு அசுரன்: உலகளவில் நடிப்பு அசுரனாக திகழ்பவர் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ. 1969ம் ஆண்டு மீ நடாலியா படத்தின் மூலம் அறிமுகமானவர். 1972ம் ஆண்டு வெளியான தி காட் ஃபாதர் படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக நடித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார்.

ஸ்கேர் க்ரோ, ஸ்கேர் ஃபேஸ், ரெவால்யூஷன், சீ ஆஃப் லவ், தி காட் ஃபாதர் 2, தி மெர்சன்ட் ஆஃப் வெனீஸ், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஐரிஷ்மேன் ஹவுஸ் ஆஃப் குஸி உள்ளிட்ட பல பிரபலமான ஹாலிவுட் படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். அடுத்ததாக ஜானி டெப் இயக்கப் போகும் மோடி படத்திலும் இவர் தான் லீடு ரோலில் நடிக்கப் போகிறார்.

4வது மனைவி யார்: 1988ம் ஆண்டு ஜன் டரன்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அல் பசீனோ ஒரே வருடத்தில் அவரை விட்டுப் பிரிந்தார். 1997ம் ஆண்டு பிவர்லி டி ஏஞ்சலோ எனும் ஹாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்ட அல் பசீனோ 2003ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.

2008ம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக் கொண்ட அல் பசீனோ 2018ல் அவரையும் பிரிந்து விட்டார். தற்போது, 29 வயதே ஆன நடிகை நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், அவரையும் கர்ப்பமாக்கி விட்டார்.

83 வயதில் 4வது குழந்தை: அல் பசீனோவின் முதல் குழந்தைக்கு 33 வயதாகிறது. இந்நிலையில், 4வது குழந்தை 4வது காதலியின் வயிற்றில் வளர்ந்து வருகிறது. இன்னும் 2 மாதங்களில் குழந்தை பிறந்து விடும் என்கிற நிலையில், தற்போது அல் பசீனோவின் 4வது குழந்தை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

Al Pacino beats Robert De Niro and Expecting A Baby With Girlfriend Noor Alfallah at the age of 83

ராபர்ட் டி நீரோவை மிஞ்சிட்டாரு: சமீபத்தில், 79 வயதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ குழந்தைக்கு தந்தையான தகவல் கசிந்தது. ஆனால், அவருடைய காதலி குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், 83 வயதிலும் அப்பாவாக முடியும் என்பதை நிரூபித்து ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் அல் பசீனோ.

நடிப்பில் மட்டுமின்றி இல்லற வாழ்க்கையிலும் இந்த வயதிலும் அல் பசீனோ ஆல் ரவுண்டர் தான் என்பதை நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X