தனுஷ், சிவகார்த்திகேயன் உடன் தில்லா மோதப் போகுற விஜய்.. பொங்கலுக்கு வெறித்தனமான வேட்டை இருக்கு!
சென்னை: 2024ம் ஆண்டு அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ள நிலையில், துவண்டு கிடக்கும் தமிழ் சினிமாவை பொங்கல் பண்டிகை தான் தூக்கி நிறுத்த வேண்டும் என தியேட்டர் ஓனர்கள் முதல் சினிமா கலைகள் வரை என பலரும் காத்திருக்கின்றனர். ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு கூட பெரிய படங்கள் வரவில்லை.
ரஜினிகாந்தின் லால் சலாம், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான், சுந்தர். சி, தமன்னா நடித்துள்ள அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் மட்டுமே நேருக்கு நேர் மோதப் போவதாக கூறப்படும் நிலையில் இன்னொரு ஹீரோவும் பொங்கல் போட்டியில் தனது தடத்தைப் பதிக்க முடிவு செய்துள்ளார்.

பொங்கல் 2024: தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் அட்டு ஃபிளாப் ஆகிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள படங்களைத்தான் தமிழ் சினிமா நம்பி இருக்கிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் என இரண்டு படங்கள் மட்டுமே பொங்கல் போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அருண் விஜய் படமும் போட்டியிட காத்திருக்கிறது.
தனுஷ் vs சிவகார்த்திகேயன்: கேப்டன் மில்லர் படத்துடன் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் போட்டிப்போட ரெடியாகி விட்டது. இன்று மாலை தாஜ் ஹோட்டலில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் போர் படமாக உருவாகி உள்ளது.
விஜய் இயக்கத்தில்: இந்நிலையில், இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன், 2.0 படத்திற்கு பிறகு காதல், குழந்தை என செட்டில் ஆன நிலையில், மீண்டும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.
விஜய்சேதுபதியும் வராரு: அதே போல இன்னொரு விஜய்யான விஜய் சேதுபதியும் தனது பாலிவுட் படமான மெரி கிறிஸ்துமஸ் படத்துடன் பொங்கலுக்கு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உடன் மோத காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











