AL Vijay: ஹனிமூன் சென்ற அமலா பால்... புது வீட்டில் குடியேறிய AL விஜய்... தரமான சம்பவமா இருக்கே!

சென்னை: அஜித் நடித்த க்ரீடம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல் விஜய்.

தொடர்ந்து மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

AL Vijay: Arya and Sayyeshaa attending AL Vijays New Home warming ceremony

இதனிடையே நடிகை அமலா பாலை திருமணம் செய்த ஏஎல் விஜய், பின்னர் சில ஆண்டுகளிலேயே அவரை பிரிந்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், ஏ.எல் விஜய் புதிய வீட்டில் குடியேறியுள்ளார்.

புது வீட்டில் குடியேறிய ஏஎல் விஜய்
தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகனான ஏஎல் விஜய், ஆரம்பத்தில் விளம்பர படங்களை இயக்கி வந்தார். அதன் பின்னர் இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக வேலைப் பார்த்த ஏஎல் விஜய், க்ரீடம் படம் மூலம் இயக்குநரானார். அஜித், த்ரிஷா லீடிங் ரோலில் நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, பொய் சொல்லப் போறோம், ஆர்யாவின் மதராசப்பட்டிணம், விக்ரம் நடித்த தெய்வ திருமகள், தாண்டவம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில், தெய்வ திருமகள், தலைவா படங்களை இயக்கும் போது, ஏஎல் விஜய் - அமலா பால் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து இயக்குநர் ஏஎல் விஜய் ஐஸ்வர்யா என்பவரை 2019ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதேபோல், அமலா பாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில், தற்போது ஹனிமூன் சென்றுள்ள அமலா பால், தனது கணவருடன் ரொமான்ஸ் செய்து வரும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இதனிடையே அவரது முதல் கணவர் ஏஎல் விஜய்யின் போட்டோவும் வைரலாகி வருகிறது. புதிய வீடு வாங்கியுள்ள ஏஎல் விஜய், தனது மனைவியுடன் அங்கு குடியேறியுள்ளார்.

புதிய வீட்டின் கிரகபிரவேச நிகழ்ச்சியில் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ஏஎல் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சாயிஷா. ஆர்யாவுக்கு மதராசப்பட்டிணம் படம் மூலம் மிகப் பெரிய பிரேக் கொடுத்தவர் ஏஎல் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X