அருண் விஜய்யின் அடுத்த அதிரடி..மாஸ் கூட்டணி..பிரபல இயக்குநருடன் கைகோர்க்கிறார்!

சென்னை : நடிகர் அருண் விஜய் யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Arun Vijay | School Friends தான் நல்லது கெட்டது இரண்டையும் சொல்லுறவங்க | *Interview

பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு யானை படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து, தடம், மாஃபியா போன்ற திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

யானை

யானை

மாஃபியா படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் யானை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்னத்தான் யானை படத்தில் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடிப்பது பிடித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பிறகும் வில்லனாக தொடர்ந்து நடிப்பேன் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

குடும்ப கதை

குடும்ப கதை

இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை... நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.

மொத்த வசூல்

மொத்த வசூல்

ஜூலை 1ந் தேதி வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 5 கோடியை வசூலித்தது. உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளில் வெளியானத் இத்திரைப்படம் 12.5கோடியை இதுவரை வசூலித்துள்ளது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து இருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த அதிரடி

அடுத்த அதிரடி

இந்நிலையில், யானை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் ஏ.எல் விஜயின் புதிய இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிருவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X