இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் காலமானார்..திரையுலகினர் இரங்கல்!

சென்னை : இயக்குநர் ஏ. எல். விஜய்யின் தாயார் வள்ளியம்மை உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

AL Vijays mother passed away

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏ எல் விஜய். அதன் பின்னர் மதராசபட்டினம், தெய்வ திருமகள் போன்ற வெற்றி படங்களை இயக்கினார் ஏ எல் விஜய்.

இவர் தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, ஏ.எல்.விஜய் 2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு துருவா விஜய் என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். வயது மூப்பு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளரும், நடிகருமான ஏ. எல். அழகப்பன், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் , அரசியல்வாதியாகவும் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். மேலும், இவர் 2010ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கிய ஈசன் திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரும் பிரமிக்கவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X