தேசிய விருது பெற்ற கதாநாயகியை வைத்து கமர்சியல் வெற்றி என்ற விருது கிடைக்குமா ?

சென்னை: இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் தலைவி. ஏ.எல்.விஜய் தேவி 2 படத்திற்கு பிறகு தலைவி படத்தை இயக்கி வருகிறார் .

ஏ.எல்.விஜய் மீது சில குற்றசாட்டுகள் உண்டு, அவர் கீரிடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்பு பொய் சொல்ல போரோம் ,மதராசபட்டினம், தெய்வதிருமகள் ,தாண்டவம்,சைவம்,தலைவா,இது என்ன மாயம் ,தேவி,வனமகன்,தியா,லஷ்மி,வாட்ச்மேன்,தேவி 2 என இதுவரை இவர் 14 படங்களை இயக்கியுள்ளார் ஆனால் இதில் இவருக்கு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் தேவியும் சைவமும் மட்டுமே ,

AL VIJAY trying to succeed with commercial hit

இவரின் மற்ற அனைத்து படங்களுமே வியாபார ரீதியில் தோல்வி அடைந்த படங்கள் என கூறுகிறார்கள் சினிமா வட்டங்கள்

.எந்த ஒரு சிறந்த இயக்குனருக்கும் வியாபார ரீதியான வெற்றி படம் மிக அவசியமாகும் அதை எப்போது விஜய் உறுதி செய்வார் என்ற கேள்விகள் சினிமா வட்டாரங்களில் கேட்க பட்டு வருகிறது.இவர் தலைவி படத்தின் மூலம் இந்த கெட்ட பெயரை உடைப்பாரா என்பதனை காத்திருந்து பார்போம் .
மறுமுனையில் கங்கனா ரனாவட் முழுவீச்சில் படத்திற்காக தயாராகி வருகிறார் .தலைவி படத்திற்காக நடண இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் இருந்து இதற்கு முன்பே பரதம் கற்று வந்த கங்கனா ,பரதத்தில் சற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் ஒரு பரதநாட்டிய மாஸ்டருடன் பரதம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

AL VIJAY trying to succeed with commercial hit

அந்த வீடியோ கங்கனா ரனாவட் டீமின் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது .அதில் 'தி குயின் நெவர் ரெஸ்ட்ஸ்' என்றும் அந்த வீடியோவின் கீழ் போடபட்டிருந்தது . இவர் குயின் படத்திற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குயின் படத்திற்கு வசனம் எழுதியதும் கங்கனா தான் ,குயின் படம் கங்கனா படங்களிலே மிக முக்கயமானதாய் பாரக்க படுகிறது. கங்கனாவின் குயின் தற்போது தமிழ் தெழுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்ய பட்டு வருகிறது. கங்கனா தற்போது தலைவி படத்திற்காக விருவிருப்பாக பயிற்சி எடுத்து வருவதை பார்கும் போது . இந்த படத்திற்காக கூட கங்கனா தேசிய வருது வாங்க வாய்ப்பும் உள்ளது என்று தோன்றுகிறது .

தற்போது கங்கனா தலைவி படத்துகாக கடுமையாக உழைத்து வர மறுமுனையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ப்ரீ புரடக்ஷன் பணிகளை செய்து வருகிறார். இந்த படம் விஜயின் படங்களில் முக்கியமானதாக அமையும் என நம்புவோம். இந்த படம் அரசியல் ரீதியாக எத்தனையோ இடையூறுகளை சந்தித்து கொண்டு தான் வருகிறது இருப்பினும் அனைத்தையும் கடந்து கமர்சியல் வெற்றி கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக செயல் படும் இயக்குனர் விஜய் மாபெரும் வெற்றி பெற்ற விஜயனாக மாறட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X