அல வைகுண்டபுரம்லோ இந்தி ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மும்பை : தெலுங்கில் கடந்த 2020ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுண்டபுரம்லோ.
அல்லு அர்ஜுன்,பூஜா ஹெக்டே, ஜெயராம்,தபு என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் அல வைகுண்டபுரம்லோ இந்தியில் ரீமேக் ஆக இருக்க தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஆக்சன் திரைப்படமாக
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அல வைகுண்டபுரம்லோ. முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஆக்சன் திரைப்படமாக வெளியான இப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

400 கோடிக்கு மேல் வசூல்
இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெட்டே க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஜெயராம்,நிவேதா பெத்துராஜ், சுஷாந்த் , தபு என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்து உலக அளவில் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

புட்ட பொம்மா பாடல் பிளஸ் பாயிண்டாக
மேலும் இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து இருக்க பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் புட்ட பொம்மா பாடல் உலக அளவில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. பாடல் வரிகள், நடன அமைப்பு கோரியோகிராஃபி மற்றும் இசை என அனைத்தும் அட்டகாசமாக அமைந்திருக்க இப்படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் மற்றுமொரு பிளஸ் பாயிண்டாக அமைந்தது.

இந்தியில் ரீமேக்
இவ்வாறு தெலுங்கில் வசூல் வேட்டை நடத்திய அல வைகுண்டபுரம்லோ இப்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யான் நடிக்கிறார், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் கிருத்தி சனோன் நடிக்கிறார். மனிஷா கொய்ராலா தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோனித் ராய், ஜெயராம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஷெஹ்சதா
இந்தி ரீமேக்கிற்கு "ஷெஹ்சதா" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. டைட்டில் லுக்கை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது . இயக்குனர் ரோஹித் தவான் இப்படத்தை இயக்க அடுத்த வருடம் 2022ல் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட் ரசிகர்களுக்காக படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. தெலுங்கை போல இந்தியிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











