சிக்கலில் தயாரிப்பாளர் அழகப்பன்
ரூ. 50 லட்சம் பண மோசடி தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் அழகப்பன் மீதுசென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஷால் ஜெயின் என்பவரிடமிருந்து அழகப்பன் ரூ. 50 லட்சம் கடன்வாங்கியிருந்தார். புதிய படம் தயாரிப்பதற்காக இந்தப் பணத்தை ஜெயினிடமிருந்துஅழகப்பன் வாங்கியதாகத் தெரிகிறது.
ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியாததால், தனது பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளார் ஜெயின். ஆனால் அழகப்பன் பணத்தைத் தராமல்இழுத்தடிதததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை போலீஸில் புகார் கொடுததார் ஜெயின்.
அந்தப் புகாரின் பேரில் அழகப்பன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திமுகவில் நீண்ட காலம் இருந்து வந்த அழகப்பன் தேர்தலுக்கு முன் கட்சியிலிருந்துவிலகினார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சன் டிவிக்கு ஏகப்பட்டகட்டுப்பாடுகளை விதித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
இந் நிலையில் தற்போது அழகப்பன் வழக்கில் மாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications