»   »  தயாரிப்பாளர் அழகப்பன் கைது

தயாரிப்பாளர் அழகப்பன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன், திரைப்படபைனான்சியரை மிரட்டியதாக திடீரென கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்தவர் திரைப்பட பைனான்சியர் விஷால் ஜெயின். இவர்அழகப்பன் மீது சென்னை மாநகர காவல்துறையில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், கடந்த 2001ம் ஆண்டில் கனவே என்ற திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாககூறி ரூ. 50 லட்சம் பணத்தை கடனாக வாங்கினார் அழகப்பன்.

ஆனால் கூறியபடி படத்தையும் தயாரிக்கவில்லை என்னிடம் வாங்கிய பணத்தையும்திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே அழகப்பனிடம் விசாரணை நடத்தி பணத்தைத்திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று கோரியிருந்தார் விஷால்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் புகார் பதிவு செய்தனர்.இந்தப் புகாரையடுத்து அழகப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிமனு தாக்கல் செய்தார்.

இந்தப் பின்னணியில் விஷால் ஜெயின், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்தார்.

அதில், அழகப்பன், எனது அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து, கொடுத் புகாரைத்திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்றுமிரட்டினார். இதன் பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அழகப்பனை நள்ளிரவில் கைது செய்தனர். சைதாப்பேட்டை11வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்ட அழகப்பனை பின்னர்சிறையில் அடைத்தனர்.

அழகப்பன் மீது கொலை முயற்சி, இடையூறு செய்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கிலும்அழகப்பனைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil