72 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு.. ஆலம்பனா படக்குழு அசத்தல்!
சென்னை : நடிகர் வைபவ் மற்றும் முனிஸ்காந்த் இருவரும் நடித்து வரும் ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பாராட்டுக்களை அள்ளியது .
முழுக்க முழுக்க காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பூதமாக நடிகர் முனீஸ்காந்த் நடித்து வருகிறார்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் 72 மணி நேரம் இடைவிடாது நடத்தப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஃபேண்டசி திரைப்படங்கள்
பெரும்பாலும் குழந்தைகளை அதிகமாக கவரும் ஃபேண்டசி திரைப்படங்கள் பெரியவர்களையும் விட்டு வைப்பதில்லை. தொழில்நுட்பம் குறைவாக இருந்த காலத்திலேயே ஃபேண்டசியில் கலக்கிய இந்திய சினிமா இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் அசரவைக்கும் பல்வேறுவிதமான நியூ டெக்னாலஜியை பயன்படுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் பிரம்மாண்ட படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் வைபவ் மற்றும் முனிஸ்காந்த் இருவரும் இணைந்து நடித்து வரும் ஃபேண்டசி திரைப்படமான ஆலம்பனா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரி கே விஜய்
சில நாட்களுக்கு முன்பு ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரித்து வருகின்றனர். முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாரி கே விஜய் இந்த படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

எந்த மாதிரியான கதை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாரி கே விஜய். ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஆதரவை கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த பாராட்டுக்களுக்குகாகத்தான் நாங்கள் இவ்வளவு கடுமையாக உழைத்தோம். என்னையும் கதையையும் மட்டும் நம்பி இந்த படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்கள் ராஜேஷ் சார் மற்றும் சந்துரு சார் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றி. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்தை கொண்டது என்பதை கூறியுள்ளோம்.

ஆச்சரியப்படும் அப்டேட்கள்
ஹீரோவாக வைபவ் மற்றும் பூதமாக முனிஸ்காந்த் மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்கள். நேரம் காலம் பார்க்காமல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் முழு ஒத்துழைப்புடன் படமாக்கி கொடுத்துள்ளார்கள். முக்கியமாக 72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக விரைவிலேயே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பல்வேறு அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரும் என தெரிவித்துள்ளார். மேலும் இதில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்க காளி வெங்கட், திண்டுக்கல் லியோனி, ஆனந்தராஜ், முரளி சர்மா என பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











