ரஜினியின் படப்பெட்டியை தூக்கிட்டு போனது யாரு? கேள்வி கேட்ட பயில்வான்.. கெஞ்சிய அன்புமணியின் மகள்!

சென்னை: ராமதாஸின் பேத்தியும் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ரா சவுமியா 'அலங்கு' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். அலங்கு படத்தை உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கி உள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கமித்ரா அன்புமணி, சினிமா எனக்கு பிடித்த விஷயம்,அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசை, இதற்கு என் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்தார்கள். சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஒரு ஈடுபாடு இருந்ததால், குறும்படம், நாடகம் என பலவற்றில் செய்து இருக்கிறேன். இதற்காக தனியாக படித்தும் இருக்கிறேன். ஆனால், இதனால் வரைக்கும் தயாரிப்பில் இறங்குவதற்கான தைரியம் எனக்கு வரவில்லை. இப்போது, நல்ல கதையுடன் ஒரு நல்ல டீம் கிடைத்து இருக்கிறது. அவர்களால் இந்த முயற்சியை நான் இப்போது கையில் எடுத்து இருக்கிறேன்.

alangu sangamithra bayilvan

விஜய், ரஜினி ஆதரவு: பெரிய பட்ஜெட்டில், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்காமல் குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களுக்கு பிடித்தது போல ஒரு கதையை படமாக எடுத்து இருக்கிறோம். இந்த படத்தின் இயக்குநர் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கி இருந்தாலும், இந்த படம் தான் அவருக்கு பெரிய படம் என்பதால். இந்த படத்தில் இருக்கும் அனைவரும் புது முகம் என்பதால், படத்திற்கு ப்ரோமோஷன் தேவைப்படுகிறது. இதனால் தான் ரஜினி, விஜய் அவர்களை சந்திக்க முடிவு செய்து அவர்களிடம் கேட்டோம் அவர்களும், மறுக்காமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

கெஞ்சிய அன்புமணி மகள்: சங்கமித்ரா செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் குறுக்கிட்ட பயில்வான் ரங்கநாதன், ராமதாஸ் சினிமாவை எதிர்க்கிறவர், அவர் எப்படி உங்களுக்கு எப்படி ஆதரவு கொடுத்தார் என்ற கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய சங்கமித்ரா, அவர் சினிமாவை எதிர்க்கவில்லை என்று சொல்ல, கடுப்பான பயில்வான் , அப்போது, ரஜினியின் படப்பெட்டியை தூக்கிட்டு போனது யார்?என்று மடக்கி மடக்கி கேள்வி எழுப்பினார். அடுத்தடுத்த கேள்வியால் நொந்துப்போன சங்கமித்ரா, ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறோம் தயவு செய்து ஆதரவு கொடுங்கள் சர்ச்சை எதற்கு அண்ணா. அவர்கள் இருவருமே சரியாகி விட்டார்கள். அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு போகிறார்கள் வருகிறார்கள். அந்த பிரச்சனை எப்போதோ சரியாகி விட்டது. நாம் தான் அதை இன்னும் அதை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றார்.

முன்னதாக சங்கமித்ரா அன்புமணி, நடிகர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி நேரில் சந்தித்து அவருக்கு அலங்கு படத்தின் ட்ரெய்லரை காண்பித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X