Vijay: தவெக தலைவர் விஜய்யை சந்தித்த பாமக அன்புமணி ராமதாஸ் மகள்.. எல்லாம் நல்ல விஷயம்தான்!

சென்னை: நடிகர் விஜய் அரசியல்வாதி விஜய்யாக மாறிய பின்னர், அரசியலுக்காக பல்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றார் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் சமீபகாலமாக அதிகமாகிவிட்டது. தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தையும் அந்த வரிசையில் சேர்த்துள்ளது கோலிவுட் வட்டாரம். அந்த வகையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார். இவரது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது. இனி அடுத்த ஷெட்யூல் அடுத்த ஆண்டுதான் தொடங்கவுள்ளது. இப்படியான நிலையில் தான், விஜய்யை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

alangu vijay sangamithra sowmiya anbumani

விஜய்: அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அலங்கு என்ற படத்தினை தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும்27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அலங்கு படத்தின் படக்குழுவினர், நடிகர் விஜய்யைச் சந்தித்து, அவருக்கு அலங்கு படத்தின் ட்ரைலரைப் போட்டுக் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அலங்கு படக்குழுவினரே மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளனர்.

alangu vijay sangamithra sowmiya anbumani

அலங்கு: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி. இவர் இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் எழுதி இயக்கியுள்ள அலங்கு என்ற படத்தினை தயாரித்துள்ளார். அலங்கு படத்திற்கு பாண்டி குமார் ஒளிபதிவாளராக பணியாற்றியுள்ளார். படத்தில் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. படத்திற்கு அஜீஸ் இசை அமைத்துள்ளார்.

alangu vijay sangamithra sowmiya anbumani

சூப்பர் ஸ்டார்: இந்தச் சந்திப்பின்போது சங்கமித்ரா சௌமியா அன்புமணி, படத்தின் நடிகர்கள், படத்தின் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரைலர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே படக்குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினைச் சந்தித்து, படத்தின் ட்ரைலரைப் போட்டுக் காட்டி, வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

alangu vijay sangamithra sowmiya anbumani

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X