ஷூட்டிங் ஸ்பாட்டில் மது அருந்தினாரா பொன்னம்பலம்? உச்சகட்ட கோபத்தில் வந்து விழுந்த அந்த வார்த்தை

சென்னை: நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கபாலி என்ற மற்றொரு பட்டப்பெயரும் உள்ளது. இவர் நடித்த பல படங்களில் இவரது வில்லத்தனமான இவரது நடிப்பு இவருக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கிக் கொடுத்தது. தற்போது உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் அவர் குறித்து திரைத்துறையில் சில அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

பொன்னம்பலம் குறித்து சமீபத்தில் பரவலாக பேசப்படக் காரணம் அவர் வீல் சேரில் அமர்ந்த படி நடனமாடிய வீடியோ தான். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் நம்ம பொன்னம்பலத்திற்கு என்ன ஆச்சு? ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தார்கள். அப்படி இருக்கையில், இப்போது உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது போலத் தெரிகிறதே என்று வருத்தத்துடன் பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக பொன்னம்பலம் கூறுகையில், எனது அக்கா மறைந்த சோகத்தில் இருந்தும், எனது உடல்நிலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்தும் வெளிவரவே நான் வீல் சேரில் அமர்ந்த படி நடனமாடினேன் என்று தெரிவித்திருந்தார்.

Alcohol Consumption on Shooting Spot Ponnambalam Opens Up About the Heated Altercation

அவதூறு கருத்துகள்: இப்படி இருக்கையில் சிலர், பொன்னம்பலம் படப்பிடிப்புத் தளத்திலேயே மது அருந்துவார். மது அருந்திவிட்டு தான் படப்பிடிப்புகளில் எல்லாம் கலந்து கொள்வார். மோசமானவர் என்று எல்லாம் விமர்சித்தனர். இது ஒரு புறம் இருக்க, இவரது இப்படியான நடவடிக்கைகளால் தான் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளார் என்றும் விமர்சித்தனர்.

கோபம்: தன்னைப் பற்றி அவதூறாக விமர்சித்து வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன், பொன்னம்பலம் அது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது, " நான் வீல் சேரில் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு பலரும் பல கதைகளை கட்டிவிடுகிறார்கள். அதுவும் அவர்கள் எல்லாம் ஏதோ என்னை அருகில் இருந்து பார்த்தவர்கள் போல சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து மது அருந்துவேன் என்று கூறுகிறார்கள். ஆதாரத்தோடு சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிலர் ஏதேதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காது கொடுக்கவும் கருத்து சொல்லவும் எனக்கு டைம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தனது சகோதரர் தனக்கு பீரில் ஸ்லோ பாய்சன் வைத்துக் கொடுத்தார் என்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Alcohol Consumption on Shooting Spot Ponnambalam Opens Up About the Heated Altercation

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X