பிரபல ஃபேஷன் இதழுக்காக.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ!
கலிபோர்னியா: பிரேசில் நடிகையும் ஹாட் மாடலுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ பிரபல ஃபேஷன் இதழுக்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான கேசினோ ராயல் படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.
பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடலாகவும், பல ஆண்டுகள் இருந்துள்ளார்.

டிவி நடிகை
சர்வதேச அளவில் பல டிவி சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் இவர். தி லேட் லேட் ஷோ, டைரா பேங் ஷோ, புராஜெக்ட் ரன்வே, நியூ கேர்ள், அஸ்திரேலியாவின் அடுத்த டாப் மாடல், காஸிப் கேர்ள், மாஸ்டர் செஃப் உள்ளிட்டவற்றில் இவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

உள்ளாடை விளம்பரம்
உலகின் முன்னணி உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடல் நிறுவனத்தின் டாப் மாடலாக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் கலக்கியவர் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் அங்கீகாரம்
ஆண்டுக்கு 6.6 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் பிரபல மாடல் அழகியாக திகழ்கிறார் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. கடந்த 2012ம் ஆண்டு வெளியான Forbes பட்டியலில் உலகளவில் டாப் மாடல்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார் 2007ம் ஆண்டு People இதழ் வெளியிட்ட உலகின் அழகான 100 பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்தார்.

கேசினோ ராயல்
டேனியல் கிரெய்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அலெஸாண்ட்ரா. தொடர்ந்து, டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

அரை நிர்வாணமாக
இந்நிலையில், தற்போது பிரபல ஃபேஷன் இதழான ELLE மேகஸினின் கவர் போட்டோவிற்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது 10 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை அதிர வைத்துள்ளார். கடற்கரை மணலில் புரண்டு படுத்தபடி அலெஸாண்ட்ரா இருக்கும் அந்த அரை நிர்வாண புகைப்படம் இம்மாத அட்டைப் படமாக அச்சிடப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











