பிகினியே வெட்கப்படும் பிகினி.. அடடா நடிகையின் மேஜிக்கல் பியூட்டி.. அப்படி வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல் படத்தில் நீங்கள் அலசாண்ட்ரா அம்ப்ரோஸை பார்த்திருக்க முடியும்.
ஹாலிவுட் நடிகையான இவர், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

பாலோயர்கள்
சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். பிகினி, ஹாட் போட்டோஸ் என ரசிகர்களை மூச்சு முட்டத் திணறடிப்பார். இவருக்கான இன்ஸ்டா பாலோயர்கள் மட்டும் 10 மில்லியனை தாண்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார்.

ஜாமியை பிரிந்தார்
ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பிறகு ஹாலிவுட் வழக்கப்படி, ஜாமியை பிரிந்துவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். அடிக்கடி இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், இப்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார் விடுமுறைக்காக.

கோடை விடுமுறை
நடிகைகளின் ஸ்பெஷல் சொர்க்கமாக இருக்கிறது மாலத்தீவு. பெரும்பாலான நடிகைகள் இங்குதான், தங்கள் கோடை விடுமுறையை கழிக்கிறார்கள். கொரோனாவுக்கு முன், காஜல் அகர்வால், ஹன்சிகா உள்பட பல தமிழ் நடிகைகள் இங்கிருந்து எடுத்து வெளியிட்ட ஹாட் போட்டோஸ் வைரலாயின.

ஹாலிவுட் நடிகைகள்
இந்தி நடிகைகளுக்கும் இதுதான் வெகேஷன் பார்ட். ஹாலிவுட் நடிகைகள் என்ன விதிவிலக்கா என்ன? அவர்களும் இங்குதான் குவிகிறார்கள். மாலத்தீவு ரிசார்ட் ஒன்றில் பிகினியே வெட்கப்படும் அளவுக்கு அலசாண்ட்ரா அணிந்து வெளியிட்டுள்ள பிகினி போட்டோஸ் பரவி வருகிறது, வேகமாக.

மேஜிக்கல் பியூட்டி
கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஏணி ஒன்றில் ஹாயாக சாய்ந்தபடி அவர் எடுத்திருக்கும் போட்டோஸுக்கு ஏகப்பட்ட கமென்ட்ஸ். ஒருவர், பார்த்துங்க வழுக்கிட போகுது என்று எச்சரித்துள்ளார். இன்னும் சிலர், அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். ஒருவர் இது மேஜிக்கல் பியூட்டி என்று வர்ணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











