வாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகை வெளியிட்டுள்ள செம ஸ்டைலான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்ட் படமான கேஸினோ ராயலில், பிரபல மாடல் அலசாண்ட்ரா அம்ப்ரோஸை பார்த்திருக்க முடியும்.
ஹாலிவுட் நடிகையான இவர், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

மூச்சுமுட்ட திணறடிப்பார்
சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். பிகினி, ஹாட் போட்டோஸ் என ரசிகர்களை மூச்சு முட்டத் திணறடிப்பார். சிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட இவர், சிரீயல்களிலும் நடித்து வருகிறார். அதிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

பிகினி குயின்
ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பின் ஹாலிவுட் வழக்கப்படி, ஜாமியை விவகாரத்து செய்துவிட்டார். குழந்தைகளை தானே வளர்த்து வருகிறார் அலசாண்ட்ரா. அடிக்கடி இன்ஸ்டாவில் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவு செய்துவரும் அவரை, பிகினி குயின் என்கிறார்கள், இன்ஸ்டாவில்.

கேள்விக்குறி போல
பிகினி ஸ்டில்களாக குவிந்து கிடக்கிறது, அவர் சோசியல் மீடியா பக்கங்களில். இந்நிலையில், செம ஸ்டைலான புகைப்படம் ஒன்றை நேற்று போஸ்ட் செய்துள்ளார். பிகினியில் தண்ணீருக்குள் நிற்கும் அவர் நனைந்து, கேள்விக்குறி போல தண்ணீர் தெறிக்கும் விதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதை ஏராளமான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர்.

நானும் செய்றேன்
பிளாக்மேஜிக் பிரைடே என்ற ஹேஷ்டேக் கொடுத்துள்ள அவர், இதை ரசிப்பீர்கள் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரையும் அவர் ஸ்டைலையும் பாராட்டியுள்ளனர். சிலர், நானும் இதைப் போல செய்து பார்க்கிறேன் என தெரிவித்துள்ளனர்.

அப்படியே இருக்கீங்களே
பலர், சும்மாவே நீங்க கலக்குவீங்க, இந்த போட்டோவுல வேற லெவல்ல இருக்கறீங்க? என்று சிலர் கூறியுள்ளனர். கல்யாணமாகி குழந்தைகளுக்கு அம்மாவான பின்னும் அப்படியே இருக்கீங்களே, எப்படி? என்று சிலர் ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்ஸ் அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர்.

ஜப்பான் பக்கம்
நீங்களே ஒரு பிளாக்மேஜிக் பெண்தானே என்று சிலரும், அப்படியே ஜப்பான் பக்கம் வாங்களேன் என்று சில ஜப்பானிய ரசிகர்களும் கூறியுள்ளனர். கடல் கன்னி மாதிரியே இருக்கீங்க என்று சிலரும் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











