அமைதியில்லாத ஆத்மாவாம்.. மாலத்தீவு கடலில் மல்லாக்கப்படுத்தபடி தத்துவம் சொல்லும் பிரபல நடிகை!

By

மாலத்தீவு: கடலில் படுத்தபடி பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!

உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. இதனால் பலர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அவர்கள் மொழி படங்களில் நடித்து வருகின்றனர்.

அது இப்போது அதிகரித்து இருக்கிறது. இந்திய சினிமாவிலும் வெளிநாட்டு மாடல்களை, நடிகைகளை இறக்குமதி செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு நடிகைகள்

வெளிநாட்டு நடிகைகள்

சன்னி லியோனில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். சல்மான் கானுடன் கிசுகிசுக்கப்பட்ட லுலியா வண்டுர், ரோமானியாவைச் சேர்ந்தவர். இவர்களை போல மேலும் பல வெளிநாட்டு நடிகைகள் இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். அஜித்துடன் நடித்த புருனா அப்துல்லா பிரேசில் மாடல்.

அலசாண்ட்ரா அம்ரோஸ்

அலசாண்ட்ரா அம்ரோஸ்

அவரைப் போலவே மற்றொரு பிரேசில் மாடலான, அலசாண்ட்ரா அம்ரோஸ் பாலிவுட்டுக்கு வரலாம் என்கிறார்கள். சிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட இவர் ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உள்பட சில ஹாலிவுட் படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார்.

இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள்

சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கான இன்ஸ்டா பாலோயர்கள் மட்டும் 10 மில்லியனை தாண்டுகிறது. ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜாமியை பிரிந்துவிட்டார்.

ரணகளப் படுத்தும்

ரணகளப் படுத்தும்

இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், இப்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில் பிகினி அணிந்தபடி மல்லாக்கப்படுத்து, கடல் நீரில் அப்படியே மிதக்கிறார். இந்த போட்டோவை ஏராளமானவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிகினி தவிர எதுவும்

பிகினி தவிர எதுவும்

மாலத்தீவுலயா இருக்கீங்க? கொரோனா ரிஸ்க் ஏரியாவாச்சே? வீட்டுக்கு திரும்பியதும் தனிமைப்படுத்திக்குவீங்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், அழகான போட்டோ, பிகினி தவிர வேற எதுவும் உடுத்தி இருக்கீங்களா? என்று கேட்டுள்ளார். இன்னும் சிலர் அவரை கண்டபடி வர்ணித்து கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

அமைதிப் படுத்துகிறது

அமைதிப் படுத்துகிறது

மற்றொரு புகைப்படத்தில் பிகினியுடன் கடலுக்கு அருகே நிற்கும் இவர், 'இந்த கடல், அமைதியில்லாத என் ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது என்று தத்துவமாக கேப்ஷன் கொடுத்துள்ளார். உங்கள் உடல் சிறப்பாக இருக்கிறது என்று சிலரும், அமைதியற்ற ஆத்மாவா, ஏன் என்னாச்சு என்று சிலரும் கூறியுள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: alessandra ambrosio maldives
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X