என்ன ஒரு ஷேப்டா.. பிகினி அணிந்து சிக்ஸ்பேக்கை காட்டும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

பிரேசில்: பிரபல நடிகையும் ஹாட் மாடலுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ பிரேசில் நாட்டின் நோரான்ஹா தீவில் எடுத்த பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் திகைக்க வைத்துள்ளார்.

பிரபல ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.

பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடலாகவும், பல ஆண்டுகள் இருந்துள்ளார்.

சீரியல் டு சினிமா

சீரியல் டு சினிமா

சர்வதேச அளவில் பல டிவி சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் இவர். தி லேட் லேட் ஷோ, டைரா பேங் ஷோ, புராஜெக்ட் ரன்வே, நியூ கேர்ள், அஸ்திரேலியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல், காஸிப் கேர்ள், மாஸ்டர் செஃப் உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்த இவர், டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான கேசினோ ராயல் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் மூலமாக சினிமாவிலும் அறிமுகமானார்.

விக்டோரியா சீக்ரெட் மாடல்

விக்டோரியா சீக்ரெட் மாடல்

விக்டோரியா சீக்ரெட் மாடல் நிறுவனத்தின் டாப் மாடலாக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் கலக்கியவர் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழில்

ஃபோர்ப்ஸ் இதழில்

வருடத்திற்கு 6.6 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. கடந்த 2012ம் ஆண்டு வெளியான Forbes பட்டியலில் உலகளவில் டாப் மாடல்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார் 2007ம் ஆண்டு People இதழ் வெளியிட்ட உலகின் அழகான 100 பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்தார்.

என்ன ஷேப்டா

என்ன ஷேப்டா

பிரபல பிரேசில் நடிகையான அலெஸாண்ட்ரா தற்போது அங்குள்ள ஃபெர்ணாண்டோ டி நோரான்ஹா தீவில் உள்ள கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த ஸ்டன்னிங்கான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தீயை மூட்டி உள்ளார். அவரது உடற்கட்டை பார்த்த ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்து வர்ணித்து வருகின்றனர்.

சர்ஃபிங்

சர்ஃபிங்

தான் ஒரு கடல் குழந்தை என கேப்ஷன் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை அலெஸாண்ட்ரா சின்ன சர்ஃபிங் போர்டை எடுத்துக் கொண்டு அலைகளுக்கு நடுவே நீர்ச்சறுக்கு விளையாட்டை விளையாடும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

வெள்ளை நிற பிகினியில் கடற்கறை பாறையில் அமர்ந்தபடி தனது சிக்ஸ்பேக் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அலெஸாண்ட்ராவை பார்த்து பலரும் ஆடிப் போய் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே என பல இந்திய நடிகைகளின் ஹாட் ஃபேவரைட் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X