பிகினியில் பூப்பறிக்கும் நடிகை அலசாண்ட்ரா.. அழகான பூவா நீங்க மாறிடப் போறீங்க.. உருகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை பிகினியுடன் பூப்பறிப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா தொற்று இன்னும் குறையாமல் பீதிக் கிளப்பிக் கொண்டிருக்க, வீட்டை விட்டு வெளியில் செல்லவே யோசிக்கிறார்கள் மக்கள்.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தும் சில நடிகர், நடிகைகள் அதில் பங்கேற்க அதிகமாக யோசிக்கிறார்கள்.

அலசாண்ட்ரா அம்ரோஸ்
ஆனால், இந்த எந்த பயமும் இன்றில் ஜாலியாக வெளிநாட்டு டூரில் இருக்கிறார்கள் ஹாலிவுட் நடிகைகள். அவர்களுக்கு இது கோடை காலமாம். அதில் ஒருவர் பிரபல மாடலும் நடிகையுமான அலசாண்ட்ரா அம்புரோஸ். சிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட இவர், ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உள்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா
டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கான இன்ஸ்டா பாலோயர்கள் மட்டும் 10 மில்லியனை தாண்டுகிறது. ஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

மாலத்தீவு சுற்றுலா
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜாமியை பிரிந்துவிட்டார். இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், இப்போது மாலத்தீவில் இருக்கிறார். அங்கு தீவு ஒன்றின் ரிசாட்டில் இருந்து ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். அங்கிருந்து தினமும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பூக்களின் சக்தி
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த பிகினி புகைப்படங்கள் வைரலாகின. இப்போது அவர் வெளியிட்டுள்ள சில ஹாட் புகைப் படங்களும் வைரலாகி வருகின்றன. இதில் கருப்பு வெள்ளையிலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, பூக்களின் சக்தி என்று பதிவிட்டுள்ள அவர், உங்களுக்கு பிடித்த பூ எது என்றும் கேட்டுள்ளார்.

அழகான பூவாக
இதற்கு ரசிகர்கள் ஜாலியாக பதில் அளித்துள்ளனர். ஒருவர், நீங்களே ஓர் அழகான பூவாக மாறப்போகிறீர்கள் என்று கூறியுள்ளார். இதுவரை வெளியிட்டதிலேயே இதுதான் சிறந்த போட்டோ என்று சிலர் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களை ஏராளமானவர்கள் லைக் செய்துள்ளனர். இவை வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











