கடல் டிரெய்லர் வருமா, வராதா?
கார்த்தி, அனுஷ்கா ஜோடி சேர்ந்துள்ள 'பேட் பாய்' அலெக்ஸ் பாண்டியன் படம் இன்று ரிலீஸ் ஆனது. கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயரை வைத்து மணிரத்னம் எடுத்த கடல் படத்தின் டிரெய்லர் இதுவரை வெளியிடவில்லை. கௌதம், துளசியின் முதுகுப்புறத்தை முதலில் காட்டிய மணிரத்னம் பின்னர் ஹீரோவின் 'சைட் போஸை' காட்டினார். வெகு நாட்களில் கழித்து தான் துளசியின் முகத்தைக் காட்டினார்.
தமிழக ரசிகர்களுக்கு கௌதமையும், துளசியையும் காட்டாமல் மறைத்த மணி அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ரசிகர்களுக்கு மட்டும் நேரில் அறிமுகம் செய்து வைத்தார். நடிகர்கள் விஷயத்தில் மட்டுமல்ல படம் எடுப்பதிலும் அவர் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
தனது கணவர் படித்த மக்களுக்காக படம் எடுப்பதாக ஒரு முறை சுஹாசினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் படம் மீனவர்களைப் பற்றியது என்று மணி தெரிவித்துள்ளார். ஆனால் இதுவும் படித்தவர்களுக்கு மட்டுமா என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் 2 பாடல் டீசர்களை மட்டுமே வெளியிட்ட மணி இன்று முதன்முறையாக கடல் டிரெய்லரை அலெக்ஸ் பாண்டியன் பட இடைவேளையில் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications












