யோகா பண்ணுங்க.. நல்லா இருக்கும்.. ஸ்டேன்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு அட்வைஸ்!

சென்னை : தினமும் யோகா பண்ணுங்க உடல் நன்றாக இருக்கும் என்று ஸ்டேன்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு கூறியுள்ளார்.

Recommended Video

Alex in Yoga Mode | #Kanmaniye Challenge | Lock Down | Quarantine

ஸ்டேன்ட் அப் நகைச்சுவை கலைஞரான அலெக்ஸாண்டர் பாபு ஸ்டேன்ட் அப் காமெடியனை தாண்டி நல்ல யோகா மாஸ்டரும் கூட. சமீபத்தில் இவர் நடத்திய அலெக்ஸ் இன் ஒன்டர்லேண்ட் ஸ்டேன்ட் அப் காமெடி நிகழ்ச்சி பெரிய அளவிளான வெற்றியை பெற்றது.

Alexander babu advice

இவர் செய்த நகைச்சுவை அனைத்தும் மிக பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இவர் இசையையும் அதனுடன் நகைச்சுவையையும் கலந்துகட்டி செய்த நகைச்சுவை மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டார் .

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக அலெக்ஸ் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். இதில் தினம் தோறும் காலை 4 மணிக்கு எழுந்து யோகா செய்வதாகவும் இதை நீங்களும் செய்யுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் தான் இப்போது அணித்திருக்கும் சட்டை பரிசாக வந்தது. இதில், வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று போட்டிருக்கிறது இது நூறு சதவீதம் உண்மை என்றும் கூறினார். மேலும் சட்டையை பரிசளித்தவருக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

Alexander babu advice

மேலும் சென்னையில் வந்து பணியாற்றும் நிறைய பேர் கூலித்தொழிலாளிகள் தற்போது ஊரடங்கு சமயத்தில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தனது காணொளியில் பதிவு செய்துள்ளார்.

அலெக்ஸாண்டர் பாபு ஐடி கம்பெனியில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே யோகா மற்றும் இசையை கற்று வருகிறார். நல்ல நகைச்சுவை குணமுடைய இவர் இசையில் நகைச்சுவையை கலந்து அதை மக்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்.

Alexander babu advice

இவரது ரசிகர்கள் இவர் இசை கருவியில் கை வைத்தாலே எழுந்து தயாராகி விடுவார்கள் ஏனெனில் அப்படி இசையை நன்கு அறிந்து அதில் விளையாட கூடியவர் அலெக்ஸாண்டர் பாபு.

அதே போல் இந்த காணொளியிலும் மறக்காமல் தனது ரசிகர்களை குஷிபடுத்த சித்ஶ்ரீராம் பாடிய 'உன்ன நினைச்சு' பாடலையும் அதன் தொடர்ச்சியாக மலேசியா வாசுதேவன் பாடிய 'தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி' பாடலையும் வாசித்த படி பாடியுள்ளார்.

More from Filmibeat

Read more about: advice yoga யோகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X