AR ரகுமான் கான்செர்ட்டில் பாடிய அலெக்சாண்டர்.. யப்பா என்னா வாய்ஸ்.. மனுஷன் பிச்சுட்டாப்டி.. வீடியோ
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சென்னையில் நேற்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி நடத்திய இசைக் கச்சேரியில் ரசிகர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். நேற்றைய தினம் காதலர் தினம் என்பதால் காதலர்கள் நேற்றைய தினத்தில் அதிகம் கலந்து கொண்டனர். இப்படி இருக்கையில் இந்த இசை நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்சாண்டர் கலந்து கொண்டு பாட்டுப் பாடினார். இவர் பாடிய பாடலும், அவரது குரலும் அதுவும் சில இடங்களில் தனது ஸ்டைலில் பாடலை பாடி அசத்தி உள்ளார்.
அதாவது நேற்றைய இசைக் கச்சேரியில் அலெக்சாண்டர் கலந்து கொண்டு அட்டகாசமாக பாடி ரசிகர்கள் அனைவரையும் மயக்கிய, ஏன் பலர் எமோஷனலில் அழுதே விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு, திருடா திருடா படத்தில் இடம்பெற்றுள்ள "ராசாத்தி என்னுசுரு என்னதில்லை" என்ற பாடலைப் பாடினார். இந்த பாடலை படத்தில் பாடியவர் மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீது. ஏ.ஆர். ரகுமானின் இசைக் கச்சேரியில் பலரும் இந்த பாடலைப் பாடி உள்ளனர். அதில் சிலர் பாடும் போது ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளனர். ஆனால் ஷாகுல் ஹமீது குரலில் பாடலைக் கேட்கும் போது ஏற்படும் திருப்தி என்பது கிடைத்ததில்லை.

ஷாகுல் ஹமீது பாடல்: அப்படி இருக்கையில் அலெக்சாண்டர் பாடும் போது அந்த திருப்தி இருந்ததாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், எல்லோரும் அலெக்சாண்டரை காமெடியனாக பார்த்த போது, ஏ.ஆர். ரகுமான் மட்டும் தான் அவரை பாடகராக பார்த்து, அதற்கான மேடையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் பலர் அவரது குரலில் தனி வெர்ஷனை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பாடலுக்கு இசைக்கருவிகள் எதுவுமே பயன்படுத்தாமல் ரகுமான் பாடலுக்கு ஹம்மிங் மற்றும் கோரஸ் மூலம் இசையமைத்திருக்கிறார் என்பது தான்.
அலெக்சாண்டர்: அலெக்சாண்டரைப் பொறுத்தவரையில் தன்னை ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர். அதுவும் பாடல்கள் மற்றும் அதனுடன் காமெடி என வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டிலும் பாடலின் சிறப்பம்சங்களை விவரித்துக் கொண்டே பாடிக்கொண்டே நகைச்சுவை செய்கிறார். அவரது யூடியூப் சேனலுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் தனது நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக காரணம், ஆபாசம் இல்லாத காமெடிகள். உருவக்கேலி இல்லாத காமெடிகள் தான்.


Click it and Unblock the Notifications