அல்போன்சாவுக்கு அல்வா ! கவர்ச்சி நடிகை அல்போன்சா தனது கணவர் குடும்பத்தார் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.பாட்ஷா படத்தில் ரா ரா ராமையா என்ற பாடலுக்கு ரஜினியுடன் ஆடி தமிழ் சினிமாவில் கவர்ச்சி தாரகையாக அறிமுகமானவர்அல்போன்சா. இவரது தம்பி ராபர்ட்டும் நடனக் கலைஞர்தான். அக்காவும், தம்பியும் பல படங்களில் ஆடியுள்ளனர்.நடனத்தோடு குட்டி குட்டி ரோல்களிலும் நடித்துள்ளார் அல்போன்சா.பிஸியாக நடித்து வந்த அல்போன்சா திடீரென நெளபல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நெளபல்முஸ்லீம் ஆவார். திருமணத்திற்கு முன்பாகவே தானும் முஸ்லீமாக மாறி தனது பெயரையும் நபீஷா என்று அல்போன்சா மாற்றிக்கொண்டார்.திருமணத்திற்குப் பின்னர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் கணவருடன் குடித்தனம் நடத்தத் தொடங்கினார் அல்போன்சா.திருமணத்திற்குப் பின்னர் தனது சொந்த ஊரான டெல்லிக்கு மனைவியுடன் சென்றார் நெளபல்.டெல்லி சென்றதும் அங்கு வைத்து, நெளபலின் குடும்பத்தினர் அல்போன்சாவிடம் வரதட்சணை கேட்டுள்ளனர்.ஆனால் இதற்கு அல்போன்சா மறுக்கவே, அவர் வசம் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், கிரெடிட் கார்டு,பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டுள்ளனர்.இதனால் அதிர்ந்து போன அல்போன்சா தனது கணவரிடம் முறையிட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்திய நெளபல்,பறித்தவற்றை பிறகு வாங்கித் தருகிறேன் என்று கூறி ஊருக்குத் திரும்பியுள்ளார்.சென்னை திரும்பிய பின்னர் தனக்கு சொந்தமான வளசரவாக்கம் வீட்டை விற்க அல்போன்சா முடிவு செய்து கணவரிடம்தெரிவித்துள்ளார். இதையடுத்து நெளபலின் குடும்பத்தினரே வீட்டை வாங்க ஒருவரை அழைத்து வந்தனர். ரூ. 52 லட்சத்திற்குவீடு விலை பேசப்பட்டது.பேச்சுவார்த்தை முடிந்து ரூ. 5 லட்சம் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மீதப் பணத்தை பதிவின்போது தருவதாக,வாங்குவதாக கூறியவர் தெரிவித்துள்ளார்.ஆனால் மீதப் பணத்தைத் தராமலேயே பத்திரப்பதிவு முடிந்துள்ளது. மீதப் பணத்தை அந்த நபரிடம் கேட்டபோது அவர்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.அந்த நபரின் பின்னணியில் தனது கணவர் வீட்டார் இருப்பதாக அல்போன்சாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தனது கணவர் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று அல்போன்சாபுகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தனது கணவரின் தம்பி, உறவினர்கள் அகமது ஹாஜி, மெஹமூத் உள்ளிட்ட 4 பேர் மீது புகார்கொடுத்துள்ளார்.டெல்லியில் வைத்து பறித்துக் கொண்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள், வீட்டை விற்று கிடைத்த ரூ. 47லட்சம் பணம் ஆகியவற்றை வாங்கித் தரும்படி அந்தப் புகாரில் அல்போன்சா கோரியுள்ளார்.
கவர்ச்சி நடிகை அல்போன்சா தனது கணவர் குடும்பத்தார் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
பாட்ஷா படத்தில் ரா ரா ராமையா என்ற பாடலுக்கு ரஜினியுடன் ஆடி தமிழ் சினிமாவில் கவர்ச்சி தாரகையாக அறிமுகமானவர்அல்போன்சா. இவரது தம்பி ராபர்ட்டும் நடனக் கலைஞர்தான். அக்காவும், தம்பியும் பல படங்களில் ஆடியுள்ளனர்.
நடனத்தோடு குட்டி குட்டி ரோல்களிலும் நடித்துள்ளார் அல்போன்சா.
பிஸியாக நடித்து வந்த அல்போன்சா திடீரென நெளபல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நெளபல்முஸ்லீம் ஆவார். திருமணத்திற்கு முன்பாகவே தானும் முஸ்லீமாக மாறி தனது பெயரையும் நபீஷா என்று அல்போன்சா மாற்றிக்கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் கணவருடன் குடித்தனம் நடத்தத் தொடங்கினார் அல்போன்சா.திருமணத்திற்குப் பின்னர் தனது சொந்த ஊரான டெல்லிக்கு மனைவியுடன் சென்றார் நெளபல்.
டெல்லி சென்றதும் அங்கு வைத்து, நெளபலின் குடும்பத்தினர் அல்போன்சாவிடம் வரதட்சணை கேட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு அல்போன்சா மறுக்கவே, அவர் வசம் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், கிரெடிட் கார்டு,பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அல்போன்சா தனது கணவரிடம் முறையிட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்திய நெளபல்,பறித்தவற்றை பிறகு வாங்கித் தருகிறேன் என்று கூறி ஊருக்குத் திரும்பியுள்ளார்.
சென்னை திரும்பிய பின்னர் தனக்கு சொந்தமான வளசரவாக்கம் வீட்டை விற்க அல்போன்சா முடிவு செய்து கணவரிடம்தெரிவித்துள்ளார். இதையடுத்து நெளபலின் குடும்பத்தினரே வீட்டை வாங்க ஒருவரை அழைத்து வந்தனர். ரூ. 52 லட்சத்திற்குவீடு விலை பேசப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிந்து ரூ. 5 லட்சம் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மீதப் பணத்தை பதிவின்போது தருவதாக,வாங்குவதாக கூறியவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மீதப் பணத்தைத் தராமலேயே பத்திரப்பதிவு முடிந்துள்ளது. மீதப் பணத்தை அந்த நபரிடம் கேட்டபோது அவர்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
அந்த நபரின் பின்னணியில் தனது கணவர் வீட்டார் இருப்பதாக அல்போன்சாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது கணவர் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று அல்போன்சாபுகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தனது கணவரின் தம்பி, உறவினர்கள் அகமது ஹாஜி, மெஹமூத் உள்ளிட்ட 4 பேர் மீது புகார்கொடுத்துள்ளார்.
டெல்லியில் வைத்து பறித்துக் கொண்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள், வீட்டை விற்று கிடைத்த ரூ. 47லட்சம் பணம் ஆகியவற்றை வாங்கித் தரும்படி அந்தப் புகாரில் அல்போன்சா கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications