புதுப்படத்திற்கு விளம்பரம் தேட நிர்வாண போட்டோக்களை கசியவிட்டாரா நடிகர்?

By Siva

மும்பை:பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் கசியவில்லை கசியவிடப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் கசிந்தன. இதையடுத்து விளக்கம் அளித்து அலி ஃபாசல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அது தன்னுடைய நிர்வாண புகைப்படங்களே என்றும், மார்ஃபிங் செய்யப்பட்டவை இல்லை என்றும் தெரிவித்தார்.

கோபம்

கோபம்

என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்ததில் கோபமாக வருகிறது. இதை கசியவிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று ஆவேசமாக பேசினார் அலி. இந்நிலையில் அந்த புகைப்படங்கள் குறித்து வேறுவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்

விளம்பரம்

அலி ஃபாசல் நடித்துள்ள மிலன் டாக்கீஸ் படத்திற்கு விளம்பரம் தேட நிர்வாண புகைப்படங்களை வேண்டும் என்றே கசியவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிலன் டாக்கீஸ் படத்தில் முதலில் இம்ரான் கான் நடிப்பதாக இருந்தது அடுத்து ஷாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார் பின்னர் அலி ஃபாசல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடியவில்லை

முடியவில்லை

மிலன் டாக்கீஸ் படத்திற்கு விளம்பரம் தேட படக்குழு முயன்றும் முடியவில்லையாம். இந்நிலையில் தான் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துள்ளன. அதனால் இது படத்திற்கு விளம்பரம் தேடும் வேலையே என்று பாலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது.

வியப்பு

வியப்பு

அலி ஃபாசலின் நண்பர் ஒருவர் கூறியதாவது, நிர்வாண புகைப்படங்கள் கசிந்தது குறித்து அலி எங்களிடம் எதுவும் கூறவில்லை. அப்படியே கசிந்திருந்தாலும் அது பற்றி பேசுவதால் மக்களின் கவனத்தை தான் ஈர்க்கிறோம். நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டது என்று அலி தெரிவித்த உடனேயே மக்கள் அதை ஆன்லைனில் தேடுவார்கள். இது அவரின் புதுப் படத்திற்கு விளம்பரம் தேடுவது போன்று உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X