கண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்

By Siva

இஸ்லாமாபாத்; பிரபல பாடகரும், நடிகருமான அலி ஜாபர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான அலி ஜபார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகியும், நடிகையுமான மீஷா ஷஃபி புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் மேலும் சில பெண்களும் அலி ஜாபர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

அத்துமீறல்

அத்துமீறல்

அலி ஜாபர் அத்துமீறி தங்களுக்கு முத்தம் கொடுத்ததாகவும், கண்ட இடத்தில் தடவியதாகவும், இடுப்பை பிடித்து இழுத்ததாகவும் சில பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணை வம்படியாக அவர் கழிவறைக்குள் அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

லீனா கனி

லீனா கனி

மேக்கப் கலைஞரான லீனா கனி அலி ஜாபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அலி ஜாபரை பல ஆண்டுகளாக தெரியும். அவர் பல முறை அத்துமீறி நடந்துள்ளார் என்கிறார் லீனா.

மதிப்பு

மதிப்பு

அலி ஜாபருக்கு பெண்கள் மீது மதிப்பே கிடையாது. கண்ட இடத்தில் தொடுவது, தடவுவது, பாலியல் ரீதியாக கமெண்ட் செய்வது எல்லாம் ஜோக் இல்லை. அலி ஜாபர் அப்படி தான் செய்வார் என்று புகார் தெரிவித்துள்ளார் லீனா.

தனி ஆள் இல்லை

தனி ஆள் இல்லை

பாலியல் தொல்லை விவகாரத்தில் மீஷா தனி ஆள் இல்லை. அலி ஜாபர் கண்ணில் படக் கூடாது என்று பிரார்த்தனை செய்தது உண்டு என்கிறார் லீனா. இடுப்பை பிடித்து மேலும், கீழுமாக தடவும்போது, கட்டிப்பிடிக்கும்போது அவரின் பிடியில் இருந்து ஓட வேண்டும் போன்று இருக்கும் என்கிறார் லீனா.

பிரபலம்

பிரபலம்

அலி ஜாபர் 2005ம் ஆண்டு செய்த சில்மிஷம் குறித்து ஒரு பெண் தற்போது பேசியுள்ளார். அலி பிரபலமானவர் என்பதால் அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினால் அதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்துள்ளார். மீஷாவின் துணிச்சலை பார்த்து அந்த பெண்ணும் தற்போது துணிந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X