நான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாலியல் தொல்லை: பிரபல பாடகர் மீது பாடகி புகார்
Recommended Video

இஸ்லாமாபாத்: தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாடகர் அலி ஜாபர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாடகியும், நடிகையுமான மீஷா ஷஃபி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பாடகி மீஷா ஷஃபி பாலியல் தொல்லை குறித்து ட்வீட்டியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் அலி ஜாபர் மீது தான் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அலி ஜாபர்
நான் பிரபலமாக இருந்தாலும் ஒரு பெண்ணாக சில விஷயங்கள் பற்றி பேசுவது மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை. பிரபலமான பாடகியான எனக்கே இது நடந்தால் இந்த துறைக்கு வர விரும்பும் எந்த பெண்ணுக்கும் இது நடக்கலாம் என்பதே என் கவலை.
பாடகர்
என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது.

குடும்பம்
பாலியல் தொல்லைக்கு ஆளானது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மன வேதனையை அளித்துள்ளது. அலியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவருடன் சேர்ந்து நான் பல மேடைகளில் பாடியுள்ளேன். அவரின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

முன் உதாரணம்
இது போன்ற விஷயங்கள் நடந்தால் அமைதியாக இருக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நான் பேசியுள்ளேன். இதன் மூலம் என்னை பார்த்து இளம் பெண்களும் வாய் மூடி அமைதி காக்காமல் துணிந்து பேசுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் மீஷா.


Click it and Unblock the Notifications











