தடுப்பூசி போடுங்க... பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ !

சென்னை : ஆலியா பட், அஜய் தேவ்கன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Corona Vaccine தொடர்பான சந்தேகங்கள் | Doctor Dilipan விளக்கம்

கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வரும் நேரத்தில் ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இயக்குனர் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்'குழு இந்த வீடியோவை சமூகவலைததள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

அலியா பட், அஜய் தேவ்கன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஒன்றிணைந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மோசமான நிலையில்

மோசமான நிலையில்

முதலில் பேசிய ஆலியா பட், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் நோய் மிக வேகமாக பரவி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கோவிட் பரவி மோசமான சூழ்நிலையில் நாடு சிக்கி தவிக்கிறது என்றார். அவரைத் தொடர்ந்து, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் எஸ்.ராஜமௌலி ஆகியோர் கோவிட் -19 க்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

வதந்தியை நம்ப வேண்டாம்

வதந்தியை நம்ப வேண்டாம்

அனைவருக்கும் தடுப்பூசிக்கொள்ள வேண்டும், தேவையின்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அஜய் தேவ்கன். COVID தடுப்பூசி போட்டுக்கொள்ள நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

வீட்டில் இருங்கள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆயுதமாக இருப்பது முக கவசமும், கைகளை கழுவதுதான். பொது இடங்களுக்கு செல்லும் போது , போதுமான இடைவேளையை கடைபிடியுங்கள் என்று ஜூனியர் என்டிஆர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ராஜமௌலி இந்த நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது, தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்றுகூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X