தாயானார் ஆலியா பட்..மகிழ்ச்சியில் திளைத்த ரன்பீர் கபூர்..குவியும் வாழ்த்து!

புதுடெல்லி : பாலிவுட் நடிகை ஆலியா பட் தாயானார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவரை காதலிக்க தொடங்கினர்.

2018ம் ஆண்டு முதல் க்யூட் ஜோடியாக வலம் வந்த ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

திருமணத்திற்கு பிறகும் ஆலியா பட் பல படங்களில் பிஸியாக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படம் ஆலியாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் பாலியல் தொழிலாளியாக ஆலியா பட் நடித்திருந்தார். இவர் நடிப்பில் நெட்ஃபிக்ஸில் கடைசியாக டார்லிங் என்ற படம் வெளியாக உள்ளது.

கர்ப்ப அறிவிப்பு

கர்ப்ப அறிவிப்பு

இதையடுத்து, ஜூன் மாதம், ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்கேன் எடுக்கும் போட்டோவை பகிர்ந்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ரன்பீருக்கும் ஆலியாவுக்கும் இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்தன. கர்ப்பத்திற்கு பிறகும் ஆலியா கர்ப்பகால போட்டோஷூட், பட ப்ரோமோஷன் என ஓய்வு எடுக்காமல் பிஸியாகவே இருந்தார்.

தாயானார் ஆலியா பட்

தாயானார் ஆலியா பட்

இந்நிலையில், நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ரன்பீர் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்று காலை ஆலியா பட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டு கிர்கானில் உள்ள எச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

ஆலியா பட்டிற்கு பிரசவ தேதி நவம்பர் 20க்கு மேல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 15 நாளுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது. இணையத்தில் இந்த செய்தி வெளியானதை அடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆலியாவின் தீவிர ரசிகர் ஒருவர், "இந்தப் பெண் குழந்தை ஒரு பெண் குழந்தைக்கு அம்மா" என்று ட்வீட் செய்துள்ளார். தம்பதிகள் புதிய குழந்தையுடன் முதல் போட்டோவை பார்க்க ரசிகர்கள் ஆர்வாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X