கணவர் படத்துக்கு மட்டும் வாழ்த்து.. ஆஸ்கர் வென்ற சொந்த படத்தை கண்டுக்காத ஆலியா பட்? அதுதான் காரணமா?

மும்பை: ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு உலகமே வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஒருத்தர் மட்டும் அதுவும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஆலியா பட் மட்டும் வாழ்த்து சொல்லாமல் ஒதுங்கி இருப்பது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஆலியா பட் நடித்திருந்தார்.

ராம்சரணின் அப்பாவாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும், அம்மாவாக நடிகை ஸ்ரேயாவும் நடித்திருந்தனர்.

ஹேப்பியான அஜய் தேவ்கன்

ஹேப்பியான அஜய் தேவ்கன்

சினிமா என்னைக்குமே உலகம் பேசும் மொழியாகவே உள்ளது. நல்ல படைப்புகள் எல்லை தாண்டிய அங்கீகாரங்களை என்றைக்குமே பெரும் என ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை சொன்ன அஜய் தேவ்கன், எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் ஆஸ்கர் வென்றதற்கும் மனமார வாழ்த்து கூறியுள்ளார்.

ராம்சரண் அப்பா

ராம்சரண் அப்பா

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்குநர் ராஜமெளலி பான் இந்தியா படமாகவே இயக்கி இருந்தார். தெலுங்கு நடிகர்களை மட்டும் வைத்து படத்தை இயக்காமல் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்களையும் நடிக்க வைத்திருந்தார். இந்தியிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு அப்பாவாக சுதந்திர போராட்ட வீரராக அஜய் தேவ்கன் நடித்திருப்பார்.

ஆலியா பட் வாழ்த்தல

ஆலியா பட் வாழ்த்தல

இன்ஸ்டாகிராமில் 75 மில்லியன் ரசிகர்களை கொண்டு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆலியா பட் ஆஸ்கர் வென்ற தான் நடித்த ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஒரு சின்ன வாழ்த்து கூட சொல்லவில்லையே ஏன் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மேலும், இயக்குநர் ராஜமெளலி மீது ஆலியா பட் இன்னமும் அந்த கோபத்துடன் இருக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார். அவருக்கு மிக அதிகமான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் படத்தில் வாம்மா மின்னல் போன்ற கதாபாத்திரத்தை ராஜமெளலி வைத்தது ஆலியா பட்டை ரொம்பவே அப்செட் ஆக்கியது. ப்ரோமோஷன்களுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டார் ஆலியா பட்.

கணவர் படத்துக்கு மட்டும்

கணவர் படத்துக்கு மட்டும்

ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் மற்றும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Tu Jhoothi Main Makkaar படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் நிலையில், நேற்று அந்த படத்துக்கு மட்டும் ஆலியா பட் வாழ்த்து சொல்லி விட்டு ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

ப்ரோமோஷனுக்கு மட்டும் ராஜமெளலி தேவை

ப்ரோமோஷனுக்கு மட்டும் ராஜமெளலி தேவை

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய ப்ரோமோஷனுக்கு மட்டும் இயக்குநர் ராஜமெளலி தேவை. ஆனால், அவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டீங்களா என ஆலியா பட்டை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆஸ்கர் மேடையில் ஆர்ஆர்ஆர் படத்தை பெருமையாக பேசிய தீபிகா படுகோனை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X