சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்
சென்னை: நடிகை ஆலியா பட் தனது தந்தை மகேஷ் பட்டுக்கு தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், கடந்த 26 வருடங்களாக நான் உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமையானவர், வேடிக்கையானவர், அற்புதமான புத்திசாலி. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களை நான் என்றென்றும் நேசிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா பட் தனது தந்தையின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சமூக வலைதளம் மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தார். செப்டம்பர் 20ஆம் தேதி மகேஷ் பட் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாலிவுட் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் மகேஷ் பட். அவர் நாம், கும்ரஹ், சதக், ஹம் ஹேன் ரஹி ப்யார் கி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு பூஜா பட், ராகுல் பட், ஷாஹீன் பாட், ஆலியா பட் என நான்கு வாரிசுகள் உள்ளனர். அவரது ஒட்டுமொத்த குடும்பமே கலைக் குடும்பம். பலரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர்கள்.
முக்கியமாக ஆலியா பட் தற்போது பாலிவுட் பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் தனது தந்தைக்காக உணச்சிபூர்வமான ஒரு பதிவை வாழ்த்து மூலம் தெரிவித்துள்ளார். மேலும் ஆலியா பட் தனது தந்தை மகேஷ் பட் உடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த குறிப்பில் கடந்த 26 வருடங்களாக நான் உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமையானவர், வேடிக்கையானவர், அற்புதமான புத்திசாலி. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களை நான் என்றென்றும் நேசிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா பட் தனது தந்தையுடன் பாசமாக இருப்பார் என்பது ஊரறிந்த விஷயம். மகேஷ் பட் தற்போது 1991ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சதக் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான சதக் - 2 திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பூஜா பட், சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர் போன்றவர்களோடு இணைந்து ஆலியா பட்டும் முதன்முறையாக தனது தந்தையின் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த உழைப்பில் உங்களுடைய பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள். உங்களுடைய படைப்பில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார் ஆலியா பட்.


Click it and Unblock the Notifications











