Alia Bhatt new house: ப்பா.. ஆலியா பட் வாங்கிய பிரம்மாண்ட பங்களா.. விலை மட்டும் இத்தனை கோடியா?

மும்பை: பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை ஆலியா பட் புதிதாக பிரம்மாண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கி உள்ளார்.

மேலும், தான் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 2 ஃபிளாட்களை தனது சகோதரிக்கு பரிசாகவும் அளித்து இருப்பது பாலிவுட்டில் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Alia Bhatt buys a new luxurious Aerial view Apartment at Pali Hill for a whopping amount

பாலிவுட்டே ஐசியூவில் படுத்த படுக்கையாக இருந்து வந்த நிலையில், ரீமேக் படங்களை கையில் எடுக்காமல் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை கொடுத்தே ஹிட் அடித்து வந்தார் நடிகை ஆலியா பட்.

தொட்டதெல்லாம் வெற்றி: பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு படமும் சரியாக ஓடவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக எழுந்த நெப்போடிசம் பிரச்சனை காரணமாக ஆலியா பட்டுக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தனா. அதன் காரணமாக அவர் அப்பா இயக்கத்தில் வெளியான சதக் 2 படு தோல்வியை சந்தித்தது. அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களும் கடகடவென சரிந்தனர்.

Alia Bhatt buys a new luxurious Aerial view Apartment at Pali Hill for a whopping amount

ஆனால், மூழ்கும் கப்பலை உடனடியாக மீட்க ராஜமெளலி உடன் கை கோர்த்தார் ஆலியா பட். ஆர்ஆர்ஆர் படத்தில் அவருக்கு டம்மி ரோல் என்றாலும் படம் ஆஸ்கர் வரை சென்றது. சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படத்தில் அவர் பட்ட கஷ்டம் கை மேல் பலனாக 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக மாறியது. கணவர் ரன்பீர் கபூர் உடன் ஆலியா பட் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. சிக்கலில் சிக்கிய நிலையிலும், அவர் எடுத்த தெளிவான முடிவுகள் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக ஆலியா பட்டை மாற்றி உள்ளது.

Alia Bhatt buys a new luxurious Aerial view Apartment at Pali Hill for a whopping amount

ஆலியா பட்டின் புதிய வீட்டின் விலை: ஹாலிவுட்டில் வொண்டர் உமன் நடிகை கால் கட் உடன் இணைந்து நடித்து வரும் ஆலியா பட் தற்போது மும்பையில் உள்ள Pali Hill எனும் இடத்தில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.

பந்த்ராவில் அமைந்துள்ள இந்த சொகுசு குடியிருப்பின் மொத்த அளவு 2,497 சதுர அடியாம். 37.80 கோடி ரூபாய் கொடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பை நடிகை ஆலியா பட் வாங்கி உள்ளார்.

தனது கணவர் ரன்பீர் கபூர் மற்றும் குழந்தையுடன் இனிமேல் ஆலியா பட் இந்த வீட்டில் தான் வசிக்கப் போவதாகமும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி இதற்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் ஸ்டாம்ப் டியூட்டி மட்டும் 2.26 கோடி ரூபாய்க்கு கட்டியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Alia Bhatt buys a new luxurious Aerial view Apartment at Pali Hill for a whopping amount

சகோதரிக்கு கொடுத்த பெரிய பரிசு: மேலும், அதே நாளில் தனது சகோதரி ஷாஹினுக்கு ஜூஹுவில் உள்ள தனது 2 ஃபிளாட்களை அவரது பெயருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்றும் அதன் அளவு 2,086 சதுர அடி கொண்ட ஃபிளாட் நம்பர் 2A மற்றும் 2Bயை கார் பார்க்கிங் உடன் சேர்த்து பரிசாக கொடுத்துள்ளாராம் ஆலியா பட்.

திடீரென சகோதரிக்கு இப்படியொரு காஸ்ட்லி பரிசை கொடுப்பதற்கு என்ன காரணம் என்றும் புதிய வீடு வாங்கி குடி புகுந்துள்ள ஆலியா பட்டின் வீட்டின் வசதிகள் குறித்தும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியிலே ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பி உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X