ரூ.32 கோடிக்கு.. தனது காதல் ஹீரோ வீட்டின் அருகில் புது வீடு வாங்கிய பிரபல ஹீரோயின்!

By

மும்பை: காதலர் வீட்டின் அருகிலேயே பிரபல நடிகை ஆலியா பட் புது வீடு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஆலியா, கரண் ஜோஹரின் ஸ்டூடன்ட் ஆப் த இயர் என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

அடுத்து ஹைவே, டியர் ஜிந்தகி, ராஸி உட்பட பல படங்களில் நடித்தார். 2 ஸ்டேட்ஸ் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இவரும் இந்தி ஹீரோ ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர். ரன்பீர், பிரபல இந்தி ஹீரோ ரிஷி கபூரின் மகன். ரிஷி கபூர், கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.

ஃபேன்டஸி படம்

ஃபேன்டஸி படம்

இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல் வெளிவரவில்லை. இருவரும் பிரம்மாஸ்த்ரா என்ற ஃபேன்டஸி படத்தில் முதன்முறையாக, ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில்
நடித்துள்ளார்.

முக்கிய வேடம்

முக்கிய வேடம்

நாகார்ஜுனா, மவுனி ராய், டிம்பிள் உட்பட பலர் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதையடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஆலியா. அவர் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.

புதிய வீடு

புதிய வீடு

இதற்கிடையே, ரன்பீர் கபூரின் வீட்டுக்கு அருகே, புதிதாக வீடு வாங்கி இருக்கிறார், நடிகை ஆலியா பட். அவருக்கு ஏற்கனவே மும்பை ஜூஹு பகுதியிலும் லண்டனிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன. இப்போது, பாந்த்ரா பகுதியில் புதிய வீட்டை வாங்கி இருக்கிறார்.

Recommended Video

Soorarai Pottru Hindi Remake | Shahid Kapoor, Sudha Kongara | FilmiBeat Tamil
ரூ.32 கோடி வீடு

ரூ.32 கோடி வீடு

அங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றின் 7 வது மாடியில் நடிகர் ரன்பீர் கபூர் வசித்து வருகிறார். அந்த அபார்ட்மென்ட் காம்பளக்ஸின் 5 வது மாடியில் புதிய வீட்டை ஆலியா வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை அவர் ரூ.32 கோடிக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X