பாலியல் தொழில் நடத்திய கேங்ஸ்டர் கேரக்டரில் ஆலியா பட்.. வெளியானது கங்குபாய் காத்தியாவாடி டீசர்!

மும்பை: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள கங்குபாய் காத்தியாவாடி டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் உள்ள சிகப்பு விளக்கு ஏரியாவான கமாத்திபுராவில் பாலியல் தொழில் நடத்தி வந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் செம தில்லாக நடித்துள்ளார் நடிகை ஆலியா பட்.

செவிலில் அறை, எட்டி உதைக்கும் காட்சிகள், அரசியல் என டீசர் மொத்தமும் ஆட்சி செய்துள்ளார் ஆலியா பட்.

பச்சப்புள்ள ஆலியா

பச்சப்புள்ள ஆலியா

2 ஸ்டேட்ஸ், கல்லி பாய் என ஏகப்பட்ட படங்களில் பால் வடியும் பச்சை புள்ளையாக நடித்து அசத்திய ஆலியா பட், இதுவரை நடித்திராத அட்டகாசமான கதாபாத்திரத்தை ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் தான். மேலும், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்குவதால் தைரியமாகவே களமிறங்கினார்.

மும்பை தாதா

மும்பை தாதா

மும்பையில் உள்ள சிகப்பு விளக்கு ஏரியாவான கமாத்திபுராவில் பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு லேடி கேங்ஸ்டர் எப்படி அந்த ஏரியாவுக்கே அரசியல் தலைவராக மாறுகிறார் என்கிற கதை தான் கங்குபாய் காத்தியாவாடி. வெள்ளை நிற உடையில் சிகப்பு கலர் பொட்டு வைத்துக் கொண்டு காட்சிக்கு காட்சி மும்பை தாதாவாக கலக்கி உள்ளார் ஆலியா.

சர்ச்சை இயக்குநர்

சர்ச்சை இயக்குநர்

சஞ்சய் லீலா பன்சாலி படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான பத்மாவத் படத்திற்கு பட டைட்டிலில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை பல பிரச்சனைகள் வெடித்தன. எல்லாத்துக்கும் மேலாக படத்தில் நடித்த தீபிகா படுகோனேவின் தலைக்கும் விலை பேசப்பட்டது.

கெட்ட வார்த்தைக்கு டியூசன்

கெட்ட வார்த்தைக்கு டியூசன்

லேடி கேங்ஸ்டர் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ள நிலையில், காத்தியாவாடி மொழியையும் கெட்ட வார்த்தைகளையும் ஆலியா பட் கற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாடி லாங்குவேஜ் மற்றும் கங்குபாயாக மாற தேவைப்படும் பயிற்சிகளையும் ஆலியா மேற்கொண்டு நடித்துள்ளாராம். உடல் எடையையும் சற்றே அதிகரித்துள்ளார்.

தெறிக்கும் டீசர்

எழுத்தாளர் ஹுசைன் சைதி எழுதிய 'மும்பை மாஃபியா குயின்' புத்தகத்தில் இருந்து இந்த படத்தை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கி உள்ளார். பென் மூவிஸ் தயாரிப்பில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.

அடி, உதை, புகை

அடி, உதை, புகை

ரெளடி பேபிகளுக்கெல்லாம் கேங்ஸ்டராக நடித்துள்ள ஆலியா பட் முரட்டுத் தனத்தை காட்ட வேண்டும் என்பதற்காக டீசரில் பீடி புடிக்கும் காட்சிகளும், பளார் என அறைவிடும் காட்சியும், எட்டி உதைக்கும் காட்சியும் என அழகாக ஆலியாவை கங்குபாயாக காட்டியுள்ளார் இயக்குநர்.

பிரபாஸ் உடன் மோதல்

பிரபாஸ் உடன் மோதல்

சம்மர் சம்பவத்தை தாண்டி இந்த ஆண்டு ஜூலை சம்பவம் களைகட்ட போகிறது. கேஜிஎஃப் 2 படம் வரும் ஜூலை 16ம் தேதியும், அந்த படத்தை இயக்கி வரும் இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் திரைப்படம் ஜூலை 30ம் தேதியும் ரிலீசாகின்றன. இந்நிலையில், ஆலியா பட்டின் கங்குபாய் காத்தியாவாடி திரைப்படம் ஜூலை 30ம் தேதி ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X