'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
நடிகை ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை: தனது தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்தியதால் நடிகை ஆலியா பட் அதிர்ச்சி அடைந்தார்.
பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகை ஆலியா பட். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். பிரபல திரைப்பட இயக்குனர் மகேஷ் பட் - நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் இளைய மகள் தான் ஆலியா.

ஆலியாவின் மூத்த சகோதரி ஷாஹீன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழா தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. முதலில் இந்த விழாவில் அக்காவை நினைத்து ஆலியா கதறி அழுத வீடியோ வைரலானது. பிறகு மது பழக்கம் குறித்து பூஜா பட் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவின் போது, ஆலியா பட் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வி ஆலியாவின் தந்தை மகேஷ் பட்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அவர், மிகவும் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார். தன்னிலை மறந்து மகேஷ் பட் கத்தியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆலியா பட் மிகவும் பயந்துவிட்டது அவரது முகத்தில் தெரிந்தது.
இதெல்லாம் நடக்கும் என தான் முன்பே சொன்னதாக ஆலியா பட் அப்போது முணுமுணுத்தார். ஷாஹீன் உள்ளிட்டோர் மகேஷ் பட்டை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் தான் சொல்ல வந்ததை, ஆவேசமாக சொல்லி முடித்துவிட்டு தான் அமைதியானார்.


Click it and Unblock the Notifications











