ஆலியா பட்டுக்கு ட்வின்ஸா?..சுவாரசியத் தகவலை பகிர்ந்த ரன்பீர் கபூர்!
மும்பை : பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் ரன்பீர் கபூருக்கும் இரட்டை குழந்தை பிறக்க உள்ளது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இந்த ஆண்டு துவக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஆலியா பட் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்
ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட் படப்பிடிப்பு தளத்தில் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் போட்டோஸ் வெளியாகி உள்ளது.

ஆலியா பட்
பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Baby coming soon
இதையடுத்து, நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் அறிவித்தார். அந்த பதிவில், Our baby ..... coming soon என குறிப்பிட்டு இருந்தார். மேலும் மருத்துவமனையில் செக்கப்பில் உள்ள போட்டோ மற்றும் சிங்கம், பெண் சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். இவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆலியாவுக்கு ட்வின்ஸா?
இந்நிலையில், ரன்பீர் கபூர் நடித்த ஷம்சேரா திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்பீரிடம் இரண்டு உண்மைகள் ஒரு பொய்யும் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரன்பீர் எனக்கு இரண்டு குழந்தை பிறக்கப்படுகிறது, நான் புராண படமொன்றில் நடிக்கிறேன், நடிப்பதிலிருந்து விலகப்போகிறேன் என கூறியிருந்தார்.

ரசிகர்கள் வாழ்த்து
இதில், ரன்பீர் புராண படத்தில் நடிப்பது உண்மைதான் என்றும், நடிப்பதிலிருந்து விலகுவதாக சொன்னது பொய் என்றும், அடுத்து எனக்கு இரட்டை குழந்தை பிறக்கப்போவதாக சொன்னது உண்மை என்றும் ரசிகர்கள் பலர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரன்பீர் எதற்காக அப்படி சொன்னார் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











