கே.வி. ஆனந்த் படத்தில் தனுஷ் ஜோடியாகும் அலியா பட்!

By Mayura Akilan

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட இந்திய நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பது இயல்பான ஒன்றுதான். பாலிவுட் படங்களில் ஜெயிக்க முடியாத நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் நடித்து புகழடைந்திருக்கின்றனர்.

குஷ்பு,சிம்ரன், ஜோதிகா, ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்ற பல நடிகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் பாலிவுட் திரை உலகில் பிரபலமாக உள்ள நடிகைகள் திடீரென தமிழ் படத்தில் நடிப்பது என்பது ஆச்சரியமான விசயம்தான்.

ஆலியா பட் ஜோடி

ஆலியா பட் ஜோடி

இந்திப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சோனம் கபூர் மறுபடியும் தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆசை என்று பேட்டி கொடுத்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் புதிய படம் ஒன்றில் தனுஷ் உடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் படத்தில் ஹிட்

முதல் படத்தில் ஹிட்

1999ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆலியா பட், கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்' பாலிவுட் படத்தில் கதாநாயகியானார். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.

150 நாட்கள் கால்சிட்

150 நாட்கள் கால்சிட்

தனுஷ் கதாநாயகன் என்ற உடன் ஒ.கே சொன்ன அலியா பட் மொத்தமாக 150 நாட்கள் கால்சீட் அள்ளி வழங்கியிருக்கிறாராம். அந்த அளவிற்கு தனுஷ் ரசிகைகளாக மாறி வருகின்றனர் பாலிவுட் இளம் நாயகிகள்.

தனுஷ் நாயகிகள்

தனுஷ் நாயகிகள்

தனுஷ் உடன் அதிக அளவில் ஜோடி சேர்வது பாலிவுட் நாயகிகள்தான் தமன்னா, ஹன்சிகா, டாப்ஸி, சோனம் கபூர் வரிசையில் ஆலியா பட் உடனான கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

கே.வி. ஆனந்த் இயக்கம்

கே.வி. ஆனந்த் இயக்கம்

மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் தான் ஹீரோ என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். அதேபோல் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹாட்ரிக் ரிலீஸ்

ஹாட்ரிக் ரிலீஸ்

தனுஷ் நடித்த ராஞ்சனா, அம்பிகாபதி, மரியான், நையாண்டி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X