மொத்தத் திட்டத்தையும் சிதறடித்த கொரோனா... ராஜமவுலி படத்தில் இருந்த இன்னொரு ஹீரோயினும் விலகல்!

By

ஐதராபாத்: ராஜமவுலி படத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகை விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்துக்கு 'ஆர்ஆர்ஆர்' என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். மரகதமணி இசை அமைக்கிறார். பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி. ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

மேலும் தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருஸேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.
பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்துவந்தது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது.

ஆலியா பட்

ஆலியா பட்

இதையடுத்து படத்தின் ஷூட்டிங்குக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், ராம் சரண் தேஜா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவர், ராஜமவுலிக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்து இருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் அவரை, சும்மா வந்துவிட்டு போவது போல காண்பிக்க வேண்டாம் என்று அவருக்காக ஒரு பாடலை இணைத்தார்.

சஞ்சய் லீலா பன்சாலி

சஞ்சய் லீலா பன்சாலி

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மொத்த திட்டத்தையும் சிதறடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரலில்தான் முக்கியமான காட்சிகளை படமாக்க இருந்தாராம் ராஜமவுலி. இதற்கிடையே நடிகை ஆலியா பட், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின், கங்குபாய் கதியவாடி என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் நடக்க இருந்தது. அடுத்து ராஜமவுலி படத்தில், ஏப்ரல் மாதம் நடிக்க இருந்தார்.

விலகுகிறார்

விலகுகிறார்

ஆனால், கொரோனாவால் மொத்த கால்ஷீட்டும் மாறிவிட்டது. இதனால், ராஜமவுலி படத்தில் இருந்து அவர் விலகப் போவதாகக் கூறப்படுகிறது. 'இந்தப் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். ஆனால், சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் முக்கியமான கேரக்டர். அதனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக ராஜமவுலி படத்தில் இருந்து அவர் விலக இருக்கிறார்' என்கிறார்கள்.

பிரிட்டீஸ் நடிகை

பிரிட்டீஸ் நடிகை

ஏற்கனவே, ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென படத்தில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக, ஹாலிவுட் நடிகையான ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தி நடிகை ஆலியா பட்-டும் விலக இருப்பதால் மற்றொரு ஹீரோயினை தேட இருக்கிறது படக்குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X