இதுக்கு முன்னாடி இப்படி பார்த்திருக்கவே முடியாது.. நீச்சல் உடையில் கிறங்கவைக்கும் பிரபல நடிகை!

மும்பை: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட்டுக்கு இன்ஸ்டாகிராமில் 51 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

பிரம்மாஸ்த்ரா, கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

சுஷாந்த் சிங் மரண விவகாரம்

சுஷாந்த் சிங் மரண விவகாரம்

எம்.எஸ். தோனி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்றும், பாலிவுட்டையும் வாரிசு நடிகையான ஆலியா பட்டையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்தன.

படுதோல்வி

படுதோல்வி

ரன்வீர் சிங் உடன் ஆலியா பட் நடித்த கல்லி பாய் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்டது. சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து வெளியான ஆலியா பட்டின் சடாக் 2 திரைப்படத்தை பாலிவுட் ரசிகர்கள் வெகுவாக புறக்கணிக்க உலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற படமாக படுதோல்வியை அந்த படம் சந்தித்தது.

ராஜமெளலி படத்தில் சீதாவாக

ராஜமெளலி படத்தில் சீதாவாக

பாகுபலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட். அந்த படத்தையும் ஓட விடக் கூடாது என பாலிவுட் ரசிகர்கள் போர்க் கொடி தூக்கினாலும், டோலிவுட் ரசிகர்கள் நிச்சயம் ஆர்.ஆர்.ஆர் படத்தை காப்பாற்றுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டர் வாட்டர் போட்டோஷூட்

அண்டர் வாட்டர் போட்டோஷூட்

பாலிவுட்டில் எந்த அளவுக்கு ஆலியா பட்டுக்கு எதிர்ப்புகள் உள்ளதோ அந்த அளவுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. சமீபத்தில் வெளியான கங்குபாய் காத்தியவாடி படத்தின் டீசரை பார்த்து விட்டு அனைவரும் ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் அண்டர் வாட்டர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு வியக்க வைத்துள்ளார்.

கடற்கன்னி போலவே

கடற்கன்னி போலவே

அப்படியே கடற்கன்னி போலவே இருக்கீங்க ஆலியா பட் என பிகினி உடையில் எக்ஸ்ட்ரா கிளாமரை காட்டியபடி இருக்கும் ஆலியா பட்டை லட்சக் கணக்கான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டோவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் லைக்குகளை நோக்கி புகைப்படம் வைரலாகி வருகிறது.

கையை காணோம்

கையை காணோம்

மேலும், நீச்சல் அடிக்கும் போஸில் இருக்கும் ஆலியா பட்டின் ஒரு கை புகைப்படத்தில் மறைந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் என்ன ஆச்சு ஆலியா பட் உங்களோட ஒரு கையை காணோமே என கலாய்த்து வருகின்றனர். ரன்பீர் கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதை தொடர்ந்து ஆலியாவுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால், ஆலியாவுக்கு நெகட்டிவ் என வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X