அடேங்கப்பா.. ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப்.. மூணு பேரும் ஒரே படத்துலயா.. செம!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஆலியா பட், பிரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைஃப் மூவரும் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போறாங்களாம்.

அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

ஷாருக்கானின் டான் 2 படத்தை இயக்கிய இயக்குநர் ஃபர்கான் அக்தர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தை இயக்கப் போகிறார்.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஆலியா பட், பிரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைஃப் மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்திற்கு Jee Le Zaara என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவே அவர்களின் கதாபாத்திர பெயர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

என்ன கதை

என்ன கதை

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கும் அளவுக்கு படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும் ஏதாவது அடுத்த வரலாற்று படமா என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொள்ளாமல் இருக்க அவர்களே கார் படத்தை டைட்டில் லுக் அறிவிப்பிலே வெளியிட்டு இது ஒரு ரோடு ட்ரிப் படம் என்பதை விளக்கி விட்டனர்.

மீண்டும் இயக்கம்

மீண்டும் இயக்கம்

சமீபத்தில் பாக்சிங்கை மையமாக வைத்து வெளியான டூஃபேன் படத்தின் நாயகன் ஃபர்கான் அக்தர் தான் இந்த படத்தை இயக்குகிறார். நடிகர் ஷாருக்கானின் டான், டான் 2 படங்களை இயக்கிய இவர், டான் 2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக மாறி உள்ளார்.

பாக்சிங் படம்

பாக்சிங் படம்

தமிழில் வெளியான சார்பட்டா பரம்பரை வேற லெவலில் வெற்றி பெற்ற நிலையில், அதே போன்று பாலிவுட்டிலும் சமீபத்தில் பாக்சிங்கை மையமாக வைத்து உருவான படம் தான் TooFan. ஆனால், அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றியடையவில்லை.

பாகா மில்க் சிங்

பாகா மில்க் சிங்

2013ம் ஆண்டு வெளியான விளையாட்டை மையப்படுத்திய பாகா மில்க் சிங் படத்தில் தடகள வீரராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியவர் நடிகர் ஃபர்கான் அக்தர். அதனை தொடர்ந்து வாசிர், டேடி, தி ஸ்கை இஸ் பிங்க், டூஃபேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பிலும் கில்லி

தயாரிப்பிலும் கில்லி

ஷாருக்கானின் டான் படத்தை தயாரித்து இயக்கிய ஃபர்கான் அக்தர், ராக் ஆன், கேம், டான் 2, ராயீஸ், கோல்ட் மற்றும் ஆஸ்கர் வரை சென்ற கல்லி பாய் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களையும் பாலிவுட்டில் தயாரித்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

ஆலியா பட் அசத்தல்

ஆலியா பட் அசத்தல்

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களான ராஜமெளலி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ஆலியா பட். இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் காத்தியவாடி ஆகிய இரு பிரம்மாண்ட படங்களும் ரிலீசானால் அவரது புகழ் இன்னமும் உச்சிக்கு செல்லும். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் ஃபர்கான் அக்தர் படத்தில் இணைந்துள்லார் ஆலியா பட்.

சர்வதேச அரங்கில்

சர்வதேச அரங்கில்

ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ள பிரியங்கா சோப்ராவின் புகழ் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஹாலிவுட் படம், நியூயார்க் ஹோட்டல் என பிசியாக இருந்தாலும், பாலிவுட் படங்களில் தொடர்ந்து கமீட் ஆகி இந்திய ரசிகர்களின் அன்பை விடாமல் பெற்று வரும் பிரியங்கா சோப்ராவும் இந்த படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் தான்.

கலக்கும் கத்ரீனா

கலக்கும் கத்ரீனா

அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடித்த சூர்யவன்ஷி படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் முன்னணி பாலிவுட் நடிகை கத்ரீனா கபூரும் ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து இந்த ரோடு ட்ரிப் படத்தில் எப்படி கலக்கப் போகிறார் என்றும், மூவருக்கும் இணையான இம்பார்டன்ஸ் வழங்கப்படுமா? உள்ளிட்ட கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் விவாதங்களாகவே சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

தேசிய விருது

தேசிய விருது

2001ம் ஆண்டு ஃபர்கான் அக்தர் இயக்குநராக அறிமுகமான தில் சாத்தா ஹை திரைப்படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் இப்படியொரு அடுத்த ரோடு ட்ரிப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஃபர்கான் அக்தர். அமீர் கான், சைஃப் அலி கான், அக்‌ஷய் கன்னா, ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான அந்த படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X