ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே!
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண தேதி அறிந்த சந்தோஷத்தில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் அந்த திருமண அழைப்பிதழை டிரெண்ட் செய்தனர்.
ஆனால், அது போலியான திருமண அழைப்பிதழ் என்பது தற்போது அதிலிருந்த பிழைகளால் தெரியவந்துள்ளது.

வைரலான அழைப்பிதழ்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்கப் போவதாக பக்காவாட டிசைன் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழை கண்ட ரசிகர்கள் பலர், அதனை உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்யத் தொடங்கினர்.

எதிர்பார்ப்பு
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சோனம் கபூர் - விராத் கோலியின் திருமணங்களுக்கு பிறகு பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் தான். ஆனால், தங்களது திருமணம் குறித்து இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

மிஸ்டேக்
அந்த திருமண அழைப்பிதழில் ஆலியா பட்டின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக அச்சிடப்பட்டுளது. மேலும், அதில், தந்தை பெயர் மகேஷ் பட்டிற்கு பிறகு முகேஷ் பட் என அச்சிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும், பல சின்ன சின்ன தப்புகள் அந்த போலியான திருமண அழைப்பிதழில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு
ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில் ஜனவரி 22, 2020ம் ஆண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான போலியான திருமண அழைப்பிதழுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எப்போது திருமண அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்ற கேள்விக்கும் அவர்கள் விடை அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











