ராஜமவுலிக்கே 'நோ' சொன்ன வாரிசு நடிகை: காரணம்...
Recommended Video

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை ஆலியா பட் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
பாகுபலி 2 படத்தை அடுத்து ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர். ஆர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் ஹீரோயின் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

சம்பளம்
வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆலியா பட்டை தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார் ராஜமவுலி. பெரும் தொகையை சம்பளமாக தருவதாக கூறியும் ஆலியா பட் நடிக்க மறுத்துவிட்டார்.

ராஜமவுலி
நிறைய சம்பளம் தருகிறேன் என்று கூறியும் ஆலியா பட் ராஜமவுலியின் படத்தில் நடிக்காததற்கு வேறு காரணம் உள்ளது. அவரிடம் டேட்ஸ் இல்லையாம். இந்த ஆண்டு முழுவதும் அவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார். அதனால் ராஜமவுலி படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அரிய வாய்ப்பு
ராஜமவுலியின் படத்தில் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆலியா பட்டால் தன்னை தேடி வந்த நல்ல வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அரிய வாய்ப்பை மிஸ் செய்வதை அறிந்தும் வேறு வழியில்லாமல் நடிக்க மறுத்துள்ளார் அவர்.

தேடல்
ஆலியா பட் நடிக்க மறுத்ததை அடுத்து ஹீரோயின் தேடும் வேலையை மீண்டும் துவங்கியுள்ளார் ராஜமவுலி. விரைவில் ஹீரோயினை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அவர்.


Click it and Unblock the Notifications











