ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார்.. ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் ஷூட்டிங்கில் இணைந்தார் ஆலியா பட்!

By

சென்னை: ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் பட ஷூட்டிங்கில் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார்.

ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது இரத்தம் ரணம் ரெளத்திரம்.

இதில், தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.

அல்லுரி சீத்தாராம ராஜூ

அல்லுரி சீத்தாராம ராஜூ

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஐரிஸ் நடிகை

ஐரிஸ் நடிகை

ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படம் உருவாகி வருகிறது.

ராம் சரண் ஜோடி

ராம் சரண் ஜோடி

இதில் பிரபல இந்தி நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கில் அவர் இன்று இணைகிறார். இதை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தில் விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதில் ராம் சரண் மனைவியாக, சீதா என்ற கேரக்டரில் ஆலியா பட் நடிக்கிறார்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாகப் படப்பிடிப்பு தடைபட்டது. இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்திருந்தது.

கங்குபாய் கதியாவாடி

கங்குபாய் கதியாவாடி

பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான நடிகை ஆலியா, இப்போது கங்குபாய் கதியாவாடி, பிரம்மாஸ்திரா, தக்த் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வரும் ஆலியா, அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றிய தகவல் வெளிவரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X