Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆலியா பட்டால் வந்த வினை.. சடக் 2 டிரெய்லரை காரித் துப்பிய நெட்டிசன்.. உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள்!
மும்பை: ஆலியா பட்டின் 'சடக் 2' டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியனுக்கும் மேல் டிஸ்லைக்ஸ் குவிந்து வருகின்றன.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் இயக்குநர் மகேஷ் பட்டிற்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் இயக்கத்தில், அவரது மகள் ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள 'சடக் 2' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
பயந்து வருது.. கமெண்ட் பக்கத்தை க்ளோஸ் பண்ணிய ஆலியா பட்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் #AliaBhatt

சடக் 2
முகேஷ் பாட் தயாரிப்பில் மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சடக் 2. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷம் பாலிவுட்டில் வலுத்துள்ளது.

ரசிகர்கள் கொந்தளிப்பு
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு மகேஷ் பட் மற்றும் அவரது நெப்போடிச குடும்பம் தான் காரணம் என்ற சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த டிரைலரையும், படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

வழக்கம்போல
சடக் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது, ஆலியா பட் தனது ட்விட்டர் கமெண்ட் பக்கத்தை முடக்கி வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது டிரைலரை வெளியிட்டுள்ள நிலையிலும், யாரும் அவருக்கு கமெண்ட் செய்ய முடியாத அளவுக்கு கமெண்ட் பக்கத்தை முடக்கி வைத்திருக்கிறார். ஆனால், நெட்டிசன்கள் அதனை ரீட்வீட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

உலகிலேயே
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் டிரைலர் வெளியான போது, 10 மில்லியனுக்கும் மேல் லைக் செய்து உலகளவில் அதிக லைக்குகள் பெற்ற படமாக அதை மாற்றினர். இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஆலியா பட்டின் சடக் 2 டிரைலர் சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

பறக்கும் மீம்கள்
சடக் 2 டிரைலருக்கு கிடைத்துள்ள டிஸ்லைக்குகளை பார்த்த பிறகு நடிகை ஆலியா பட்டின் ரியாக்ஷன் இப்படித் தான் இருக்கும் என்றும், வாரிசு நடிகையாக வந்த அவருக்கு இதற்கு மேலும் வேண்டும் என்றும் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களையும், ட்ரோல் வீடியோக்களையும் போட்டு திட்டித் தீர்த்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

சஞ்சய் தத்துக்கு பின்னால்
நடிகர் சஞ்சய் தத்துக்கு கேன்சர் நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரைலர் முதல் பல இடங்களில் சஞ்சய் தத்தை ஹைலைட் படுத்தி அவருக்கு பின்னால் மறைந்து நின்று தப்பிக்க பார்க்கும் மகேஷ் பட்டையும் அவரது மகள் ஆலியா பட்டையும் சும்மா விடக் கூடாது என்றும், சஞ்சய் தத், இந்த படத்தை நாங்க புறக்கணிக்கிறோம்.. எங்களை மன்னித்து விடுங்கள் என்றும் சஞ்சய் தத் ரசிகர்களும் ட்வீட் போட்டு வருகின்றனர்.