இதுக்கு மேல அவமானம் வேணுமா.. ஆலியா பட்டின் ‘சடக் 2’ படத்துக்கு என்ன ரேட்டிங் தெரியுமா?

மும்பை: ஆலியா பட்டின் 'சடக் 2' படத்திற்கு IMDB வெறும் 1.1 ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்துள்ளது.

உலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரைலர் என்ற சாதனையை பெற்ற ஆலியா பட்டின் சடக் 2 படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உலகம் முழுவதும் வெளியானது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சாரா படத்திற்கு 10 ஸ்டார்கள் வரை ரேட்டிங் கொடுத்து கெளரவப்படுத்தி இருந்தது IMDB.

மகேஷ் பட் சொதப்பல்

மகேஷ் பட் சொதப்பல்

இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் தத் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான படம் சடக். அந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருந்தது. இந்நிலையில், தற்போது இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட், சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள சடக் 2 படம் மிகப்பெரிய டிசாஸ்டர் படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது.

ரசிகர்கள் புறக்கணிப்பு

ரசிகர்கள் புறக்கணிப்பு

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு மகேஷ் பட்டும், பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசமும் காரணம் என்ற சர்ச்சைகள் கிளம்பின. மகேஷ் பட் இயக்கத்தில், அவரது மகள் ஆலியா பட் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்தை பாலிவுட் ரசிகர்கள் முற்றிலுமாக புறக்கணிப்பும் செய்துள்ளனர்.

IMDB ரேட்டிங்

IMDB ரேட்டிங்

அமேசான் நிறுவனத்தின் திரைப்படங்களை பற்றிய தரவுகளை கூறும் தளமான IMDB பல படங்களுக்கு ஸ்டார் ரேட்டிங்குகளை கொடுத்து வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சாரா படத்திற்கு முழு மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், ஆலியா பட்டின் சடக் 2 படத்துக்கு வெறும் 1.1 ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்துள்ளது.

Recommended Video

'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்
ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கான எதிர்ப்பு மட்டுமே இது இல்லை என்றும், உண்மையாவே படம் சொதப்பல் என தரண் ஆதர்ஷ் உள்ளிட்ட பல விமர்சகர்கள் கிழித்து தள்ளி வருகின்றனர். ஆலியா பட் இனிமே பாலிவுட்டில் தலை தூக்கவே முடியாத அளவுக்கு அவரது அப்பாவே படு குழி தோண்டி விட்டார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X